பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129


படையொன்று இவன் மார்பில் தைக்கப் பெரும் புண் உண்டாக்கி விட்டது என்ற ஒரு செய்தி பரவிவிட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.6 பாழி நகர்க்கு உரிய நன்னன் மேற்கொண்ட போரில், அந்நன்னன் நண்பனான, வேளிர் குலத்து வந்த ஆய் எயினன், நன்னன் பொருட்டுப் போரிட்டு உயிர் இழந்தான்: அதனால், அவன் உரிமை மகளிர் துயர் உற்றனர். தன் பொருட்டு உயிர் துறந்த ஆய் எயினன் உரிமை மகளிர்க்கு உண்டான துயரைத் துடைக்க வேண்டியது தன் கடனாகவும், நன்னன் அது செய்திலன்.

அது அறிந்த அகுதை, அவ்வேள் மகளிர் துயரைப் போக்கினான்.7 அதனால், நன்னன் அகுதை மீது சினங்கொண்டான். நன்னன் நல்லவன் அல்லன் என்பதை அறிந்திருந்த கோசர், அந் நன்னனால், அகுதைக்குக் கேடு வரும் என அஞ்சி, நன்னன் அணுக மாட்டார் இடத்தே வைத்துக் காத்தனர்8.

தன்னைப் பாடி வரும் பொருநர், கூத்தர் முதலாம் பரிசிலர்க்கு போரில் தான் பற்றும் பிடியும், களிறும், பெரும் பொருளும், வழங்கிய வள்ளல் பெருந்தகை அகுதை?9

2. அக்குரன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் கொடைவளப் பெருமையைப் பாராட்டும் புலவர் அரிசில் கிழார், சேரலாதன், அக்குரன் போலும் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல், எனப் புகழப் படுமளவு வாழ்ந்த கொடையாளி அக்குரன்10