பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132


11. அறுகை

அறுகை, சேரன் செங்குட்டுவனின் துணைவன் மோகூர் பழையனோடு போரிட்டுத் தோற்றவன். தோல்விக்கு நாணி நாடு விட்டுச் சென்றவன். நண்பனுக்கு உண்டான இழிவு போக்கச் செங்குட்டுவன் மோகூர்மீது படையெடுத்துச் சென்றான். பழையனை வென்றான். அவன் காவல்மரமாம் வேம்பையும் வெட்டி வீழ்த்தி, முரசு செய்வதற்கென தன் ஊர் கொண்டு சென்றான். பாடிய புலவர் பரணர்31

12. அன்னி

அன்னி, நீடூர் தலைவனான எவ்வி என்பானுடைய நண்பன். அன்னியின் பகைவன் திதியன். திதியனுடைய காவல் மரமான புன்னையை அழிக்க அன்னி எண்ணினான். நண்பனான எவ்வி நன்மொழி கூறித் தடுத்தும் கேளாத அன்னி படை கொண்டு சென்றான். குறுக்கை எனும் இடத்தே நடந்த போரில் திதியனால் கொல்லப்பட்டான். எவ்வி கூறிய அறிவுரை கேளாது அழிந்த அன்னியின் செயலைப் புலவர் பழித்தனர்.32

13. அன்னிமிஞிலி

கோசர் என்ற இனத்தவரின் வயலில் புகுந்து பயற்றுப் பயிரை அன்னிமிஞிலி என்ற இம் மங்கையின் தந்தையின், பசுக்கள் மேய்ந்து விட்டது. அச்சிறு தவறுக்கு, கோசர் அன்னி மிஞிலியின் தந்தை கண்களையே போக்கி விட்டனர். கோசர் கொடுஞ்