பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

 எனும் பெயருடைய ஒருத்தியின் தந்தையினுடைய பசுக்கள். கோசர்க்குரிய நிலத்தில் புகுந்து விட்டன. அக்குற்றத்திற்காக கோசர் அன்னி மிஞிலியின் தந்தையுடைய கண்களை அழித்து விட்டனர். இந்தக் கொடுமைக்குப்பழி தீர்க்க அன்னி மிஞிலி அழுந்தை வாழ் திதியனின் துணை நாடினாள்' அழுந்தைத் திதியன, கோசரை அழித்தான்112 இது பரணர் கூறும் திதியன் வரலாறு.

நக்கீரர், வெள்ளி வீதியார் கயமனார் ஆகிய புலவர்கள், புன்னையைத் தன் காவல் மரமாகக் கொண்ட திதியன் ஒருவனைப் பாடியுள்ளனர். அக்காவல் மரமாய புன்னையை அழிக்கஎண்ணினான் அன்னி என்ற ஒருவன் அன்னியின் நண்பனான எவ்வி எனும் வேளிர் குலத் தலைவன் அத்தகு அழிவு தரும் செயலில் ஈடுபட வேண்டாம் என அன்னிக்கு அறிவுரை கூறித் தடுத்தான். அதையும் கேளாது புன்னையை அழித்தஅன்னியை போரிட்டுக் கொன்று பழி தீர்த்தான் திதியன்113 என்பது புலவர் மூவர் கூறும் குறுக்கைப் பறந்தலைத் திதியன் வரலாறு.

புலவர் மாமூலனார், பரணர் மகிழ நாளவை இருந்து நனிமிக நல்கும் கொடைவள்ளல் திதியன் ஒருவனைப் பாடியுள்ளார்114

இம் மூன்று திதியன்களே அல்லாமல், பொதியிலை ஆண்ட, விற்படை, வேற்படை தேர்ந்தவனும்,பொன்னாலாய பெரிய தேர் பல உடையவனுமான பொலந்தேர்த்திதியன்' என்பானைப் பரணரும், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும், பாடியுள்ளனர்.115 பாண்டியன் நெடுஞ்செழியனை,