பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

களையும் தர" முன் வந்தும். அதை ஏற்றுக் கொள்ளாது பெண் கொலை புரிந்த நன்னன், என்ற பழியை ஏற்றான்.46 அப்படுகொலைக்குப் பழி வாங்கத் துணிந்த கோசர் எனும் கூட்டத்தார், அவன் நாட்டில் புகுந்து அம்மாவினை வெட்டித் துண்டுகளாக்கித் தம் ஊர்க்குக் கொண்டு சென்றனர். 147

"கோசர். தம் முயற்சிக்குத் துணையாக அகுதையென்ற தலைவனை நாடினர். வள்ளலான அகுதையை, அகவன் மகளிர்க்குப் பெரும்பிடிகளைப் பரிசிலாகத் தரும்படி செய்தனர். அப் பிடிகளை அம்மகளிரைக் கொண்டு நன்னன் தோட்டத்து மாமரத்தில் கட்டச் செய்தனர்.

அப்பிடிகள் மண்ணைப் பறித்த நிலையில் அம்மா மரம் வேரோடு ஆற்றிற் சாய்ந்தது. ஒரு காய் தின்ற தப்பிற்கு ஒரு மகளைக் கொலை செய்த நன்னன், மரமேயில்லையாகச் செய்த இவ் வகவன் மகளிரை என் செய்வன் என்பது துணிய இச் சூழ்ச்சி செய்தனர்"148 என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது. அது வரலாற்றுண்மை உடையதன்று.

பாழிப் பெரு நகரும், பாரமும், பகைவர் கைப்பட்டமையால், நன்னன், கடம்பின் பெருவாயில் என்று அழைக்கப் பெரும், வாகைப் பெருந்துறை சென்று ஆளத் தொடங்கினான். சேர நாட்டின் ஒரு பகுதியான, வாகைப் பெருந்துறையை மீட்க இருமுறை படை கொண்டு வந்த சேர வேந்தனை வெற்றி கொண்டு பெருந்துறையைக் காத்தான்.149

சேரநாட்டு அரியணையில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் அமர்ந்த பின், இளஞ்சேரல் இரும்-