பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

 வனாய் விளங்கியதால், வேட்டுவன், நெடு வேட்டுவன், கடிய நெடு வேட்டுவன் என்றெல்லாம் சிறப்புப் பெயர் பல பெற்றவன்.161

கைப்பற்றிய காட்டு யானைகளுக்கு மொழி அறிவித்துப் பழக்க வல்ல திறமை கொண்ட பண்ணி, பாண்டியர் படையில் பணியாற்றியவன். பரிசிலர் தமக்கு வரையாது வழங்கும் வள்ளலாகவும் விளங்கியவன். புலவர் பெருந்தலைச் சாத்தனாரால் பாராட்டப் பெறும் பெருமை படைத்தவன்.162

65. பழையன் மாறன்

கள்ளக் குறிச்சியை அடுத்த மோகூர் தலைவன். மோகூர் மன்னன் என அழைக்கப் பெற்றவன். மாறன் என்ற பாண்டியர்க்குரிய பெயரையும், அவருடைய வேம்பினையேத் தன் காவல் மரமாகவும் கொண்டு, பாண்டியர் படைத் தலைவனாக விளங்கியவன். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய படையணியில் இருந்த கோசர் இன வழி வந்த வீரர்கட்குத் தலைவனாக விளங்கிய மாறன் என புலவர் மாங்குடி மருதனாரால் புகழ்ப்பட்டவன்.163

சோழன் கிள்ளி வளவன், கூடல் மாநகரைக் கைப்பற்ற முற்றுகையிட்ட போது, பழையன் தன் களிற்றுப் படையோடு சோழனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான். சோழனுக்குரியகளிறு களையும் குதிரைகளையும் கைப்பற்றினான். சோழனுக்குரிய பல ஊர்களையும் கைப்பற்றிக் கொண்டான்.164

11