பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


68. பிட்டங் கொற்றன்

சேரர் படைத் தலைவனக விளங்கிய பெருவீரன். சேரநாட்டு குதிரைமலைப் பகுதியின் தலைவன்172 பகைவர் படைகளைத் தான் ஒருவனாக நின்று தடுத்து அழிக்கும் ஆற்றல் மிக்கவன். கோசர் போன்ற படை வீரர், படைப் பயிற்சி பெற எறியும் படைக்கலன்களை இலக்காக ஏற்று நிற்கும் முருக்க மரம் போல, பிட்டன் படைவர் படைக்கலங்களை உடலில் ஏற்று நிற்கும். பெருவன்மையுடையவன்173 சம்மட்டி அடிகளைத் தாங்கி நிலைகுலையா விளங்கும் கொல்லன் உலைக் களத்து பட்டடைக் கல்போல, பகைவர் படைத்தாக்கு தலைத் தாங்கி நிற்கும் திண்ணியன் பிட்டங் கொற்றன்174

பேராற்றல் பெற்றுத் திகழ்ந்த பிட்டன் பெருங்கொடை வள்ளலாகவும் விளங்கினான். பரிசிலர்க்கு நெல்லும் மணியும், யானைகளையும் பசுக்களையும் வாரி வழங்கினான்.175 அவன் வள்ளல் தன்மையில் தோய்வு ஏற்படா வண்ணம் பிட்டனின் அரசனான சேரவேந்தனும் துணைகின்றான்.176 பிட்டனைப் போலவே, அவன் நாட்டுமக்களும் பெருங்கொடை வள்ளல்களாய் வாழ்ந்தனர்.177

பேராண்மையாளனும், பெருங்கொடையாளனுமாய் விளங்கிய பிட்டங் கொற்றன், துயர் அறியாப் பெரு வாழ்வு பெற்று வாழ வேண்டுமென வாழ்த்தி அவன் புகழ் பாடியுள்ளனர். காவிரிப் பூம் பட்டின்த்துக் காரிக் கண்ணனார்,178 ஆருலவிய நாட்டி ஆலம் பேரி, சாத்தனார்,179முதலாய புலவர் பெருமக்கள்.