பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

பெரியன். 190 எப்போதும் இரவலர் சூழ பெருங் கொடை வள்ளலாய் வாழ்ந்தவன். தான் வாழும் நாடு வறுமை கொள்ளுந் தோறும், புலவர் கல்லாடனார் பொறையாறு போந்து பெரியன் அரவணைப்பில் வாழ்வார். இரவலர் இன்னல் தீர்க்கும் அவன் கொடைவளம் பெருக அவன் வயல் வளம் ‘வேலியாயிரம் விளைக’ என புலவர்கள் வாழ்த்தப் பெருவாழ்வு வாழ்ந்தான்.191

74. போரூர் கிழவன் பழையன்

சோணாட்டில், காவிரிக் கரையில் அமைந்த பெருவளம் பெற்ற ஊர்களுள் ஒன்று போஓர். போரூர் என வழங்கும் அவ்வூர்த் தலைவனாக விளங்கியவன் பழையன் என்பான்191 விற்படை, வேற்படை தேர்ந்த பெருவீரன் இலக்கு தப்பாமல் வேலெறிவதிலும் மாரி போல அம்பு சொறிவதிலும் ஆற்றல் பெற்றவன். சோழன் பெரும்பூட் சென்னியின் படைத் தலைவனாக விளங்கினான். 193

சோழ மன்னனான செங்கணானுக்கும், சேர அரசன் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் பகை மூண்டது. கழுமலம் என்ற இடத்தே பெரும் போர் மூண்டது. சேரன் படையில் படைத் தலைமை ஏற்று நன்னன், ஏற்றை அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய ஆற்றல் மிக்க வீரர் அறுவர் போரிட்டனர். சோழர் படைக்குப் பழையன் தலைமை தாங்கினான். பேராற்றல் காட்டிப் போரிட்டான். ஒரே பகலில் சேரர் படைத்தலைவர் அறுவரையும் வென்று அழித்தான். சேரர் படையை புறங்காட்டி ஓடச் செய்தான். வெற்றி பெரும் நிலையில் மார்பில் அம்பு தைக்க விழுப்புண் பெற்று வீரமரணம் அடைந்தான்.