பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

 போரில் வென்று அவன் பல்லைப் பறித்துக் கொணர்ந்து தன் தொண்டி நகர் வாயிற் கதவில் வைத்துப் பொறித்தான் என்பர்.205

மூவன் என்ற பெயருடைய இவ்விருவரும் வாழ்ந்த நாடு நெய்தல் நிலம் என்பதாலும், இருவரும் பண்பு நலம் அற்றவர்களாக புலவர்களால் காட்டப்பட்டுள்ளதாலும், இருவரும் ஒருவராகவே இருக்கக் கூடுமோ என்பதை ஆராய்ச்சியாளர் ஆராய்தல் வேண்டும்.

83. வண்டன்

கொடை வள்ளலாய், புலவர்கள் போற்ற வாழ்ந்தவன். "வண்டன் அணைய" என, வள்ளல் தன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாக புலவர் காப்பியாற்றுக் காப்பியனாரால் காட்டப் பெறும் பெருமை பெற்றவன்.206

84. வல்லங்கிழான்

சோணாட்டில், வல்லம் என்ற நகரின் காவல் தலைவனாக விளங்கியவன். எல்லோர்க்கும் நல்லவனாய் நாடாண்ட புகழ் உடையோன். பேராண்மை கொண்டவன். பேரரணும் பெரு வளமும் படைத்த வல்லம் நகரைக் கைப்பற்ற வந்த ஆரியப் படையினை வென்று அழித்த வீரன் வல்லங் கிழான்.207

85. வல்லார் கிழான் பண்ணன்

விளாமரங்கள் நிறைந்த, சுற்றிலும் காடுகளால் சூழப்பெற்ற வல்லார் எனும் ஊரின் தலைவன். பண்ணன் எனும் பெயருடையவன். அம்பேந்திய வீரர் நின்று காக்கும் அரிய அரண்களை உடையது வல்லார்