பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178



87. விச்சிக்கோன்

விச்சியர் குடியில் வந்தோன், விச்சிமலையைத் தன்னகத்தே கொண்ட நாட்டு அரசன் மூவேந்தரையும் வென்று தம் தலைநகரான குறும்பூரில் வெற்றி விழாக் கொண்டாடினர் விச்சியர் எனப் பரணர் பாராட்டியுள்ளார்.212 விச்சியரை, சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொண்டான் எனப் பதிற்றுப் பத்துப்பதிகம் கூறுகிறது.213

வாட்போரில் வல்லவன் விச்சிக்கோ. அவனுடைய இளவல், இளவிச்சிக்கோ என அழைக்கப்பட்டான். கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோவின் இணைபிரியா நண்பனாக விளங்கியவன்

குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கியவன் விச்சிக்கோ. பாரி இறந்தானாக அவன் மகளிர்க்கு மணஞ் செய்து வைக்கும் பொறுப்பையேற்ற கபிலர் அம் மகளிரை அழைத்துக் கொண்டு விச்சிக்கோன் அவைக்கு வந்தார். பாரி மகளிரை மணந்து கொள்ளும் மாண்புடையான் அவன் என்று எண்ணினார் கபிலர். ஆனால், மூவேந்தர்க்கும் பகைவனாய பாரியின் மகளிரை மணந்தால். அப் பேரரசர் பகைப்பர் என அஞ்சி விச்சிக்கோன் அம் மகளிரை மணக்க ஒப்பவில்லை.214

விச்சிக்கோன் புகழ்பட வாழ்ந்தனன் எனினும், அவன் பிறந்த விச்சியர் குடி புலவர் பழிக்கு ஆளான குடியாக விளங்கியது. பெண் கொலை புரிந்த நன்னன் வழி வந்த பழியுடையது அவ்விச்சியர் குடி. பரிசில் வேண்டி தம் மனை அடைந்து வாழ்த்தி நின்ற புலவர்க்கு, பரிசில் அளிக்காது வாயில் கதவை