பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பலவற்றைக் கொண்டவன், பாணர், புலவர், பொருநர்க்களுககெல்லாம் வாரிவழங்கும் வள்ளல்.

மாரி வெண்கோ

பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியும், சோழ நாட்டில், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஆண்டிருந்த காலத்தில், சேர நாட்டில் ஆட்சி புரிந்திருந்தவன். மூவேந்தர்கள் எக்காலத்தும், தங்களுக்குள்ளாகப் பகைகொண்டு போரிட்டு அழிவர், அழிப்பர், என்பதற்கு மாறாக இம் மூவரும் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தனர். இச்சிறப்பைப் பாராட்டியுள்ளார் ஒளவையார்.57

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறை

கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை; சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, என்றெல்லாம் அழைக்கப்பெறுவன். சோறாக்க மூட்டிய தீ, ஞாயிற்றின் தீ அல்லது பிற தீ அறியாது அவன் நாடு. வான வில்லை அல்லது, பகை வில்லை அறியார் அவன் நாட்டவர்; உழுபடை அல்லது பகைப்படை அறியாது அவன் நாடு” என்றெல்லாம் குறுங்கோழியாரால் பாடப் பெற்ற நல்லாட்சியாளன்.58

ஆனால் பேராற்றலோ, பெரும்படையோ உடையானல்லன், ஆதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிட்டு ஒருமுறையும்,59 இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போரிட்டுஒருமுறையும்60 தோல்வி கண்டான்.