பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஒற்றுமையாலும், அகத்தில் கூறப்பெற்ற இளம் பெரும்சென்னியும், பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியும் வேறு வேறு அல்லர், ஒருவரே,

சேரமான்,பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாராட்டும்போது, "இயல்தேர் அண்ணல்21 என, அவன் தேர் உடைமை பாராட்டப்பெற்றுள்ளமையாலும், இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமையாலும், உருவஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனின் பகைவர்களாகப் பாழியில் பெரும் பொருள் சேர்த்து வைத்த வேளிர்களும்22 அவர்கள் தலைவனாம் இருங்கோவேளும்.,23 கூறப்பட்டுள்ளமையாலும், அவ்வேளிர்கள், கரிகாலன் மீது, அவன் இளமைக்காலத்திலேயே போர் தொடுத்தது, அவன் தந்தை தங்கள் பாழியை அழித்தமைக்குப் பழிவாங்கும் எண்ணத்தால் இருக்கலாம் ஆதலாலும்; பாழிக்குரியோன் எனப்பட்ட நன்னன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலொடு வாகைப் பறந்தலையில் போரிட்டு இறந்தான். பாழி, மீண்டும் நாற்முடிச்சேரலுக்கு உரியதாகிவிட்டது24 இச்செய்திகளால் பாழியொடு தொடர்புடையதாகத் தோன்றும் வாகைப் பறந்தலையில், கரிகாலன், ஒன்பது மன்னர்களை வென்றான்25 என கூறப்படுவதால், கரிகாலனும், அப்பாழியோடு யாதேனும் தொடர்புடையவனாதல் வேண்டும் எனக் கருத இடமுண்டு, ஆதலாலும்; அவன் தந்தையாம் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, பாமுளுர் எறிந்த இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, இளம்பெரும் சென்னி என்ற நால்வரும் வேறு வேறு அல்லர், ஒருவரே.