பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


தமிழ்நாடு முழுவதும் தன் ஆணைக்கீழ் அடங்கிய பின்னரும் வெற்றித் திருமகள் மீது கொண்ட வேட்கை குறையாதாகவே, வடநாடு சென்று, இடையில் உள்ள அரசர்களையெல்லாம் வென்று விட்ட பின்னர், இமயத்திற்கு அப்பால் உள்ள நாடுகளையும் வெற்றி கொள்ள முன்னேறிய போது,பனி மிகு இமயம், அம்முயற்சிக்குத் தடையாக நிற்கவே, அதன் உச்சியில் தன் புலிக்கொடியை நாட்டிவிட்டு மீளத் தொடங்கினான். அவ்வாறு மீள்வானுக்கு, வ ச் சி ர தா ட் டா ன் கொற்றப்பந்தரையும் மகத நாட்டான் பட்டிமண்டபத்தையும், அவந்தி அரசன் தோரண வாயிலையும் கொடுத்து நண்பர்களாயினர்.42

கரிகாலனின் இவ்விமயப் பபைடையெடுப்பு உண்மையில் நடைபெற்ற ஒன்று என்பதை Imperial Gazetteer of India;—Sikkim Vol; 10: Page; 32/; vol:22, Page:365, Hand Gazetteer of India: Cholas Pass. Encyclopeadia Brittanica: Sikkim, Vol 5, Page:667; Vol 20, Page: 640 ஆகிய நிலைத்த ஆவணங்களைச் சான்று காட்டி உறுதி செய்துள்ளார் திருவாளர் மு.இராகவையங்கார் அவர்கள்43

கரிகாலன், கட்டுக்கடங்கடங்காது பெருக்கெடுத்தோடிய காவிரிக்குக்கரையும்,அணையும் கட்டி, காவிரி நீா் கொண்டு சோழ நாட்டைச் சோற்று வளம்மிக்க நாடாக்கினான். மகாவம்சம், கரிகாலன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று, ஆங்குப் போரில் தோற்ற பல ஆயிரம் வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து, அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கூறுகிறது.44