பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

 அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர் குடிவந்தவன்.53 தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறா ஒன்றைக் காத்தற்பொருட்டு துலா, புகுந்த சிபியின் வழி வந்தவன் இவன் அதனால் "செம்பியன்" என அழைக்கப் பெறுவன.54

தான், சேரர் வழி வந்தான் ஒருவனுக்குரிய, கருவூர்க்கோட்டையை முற்றுகையிட்டு அக்கோட்டையைச் சூழ இருந்த காவற்காட்டினை அழிக்கவும், மரம் வெட்டப்படும் ஒலிகேட்டும், அகத்திருப்போன் வெளிப்பட்டு எதிர்க்கும் ஆற்றல் இழந்து அடங்கி இருக்கும் நிலையிலும், முற்றுகையை மேலும் தொடர்வது முறையாகாது என ஆலத்துார் கிழாராலும்55 மாறோக்கத்து நப்பசலையாராலும்56 அறிவுறுத்தப்பட்டவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அழிய, அவனுக்குரிய வஞ்சித்தலைநகரை வாட்டியவன் இவன். 57 சேரர்க்குத் துணை சென்ற மலையமானை வென்று, அவன் மக்களைச் சிறை கொண்டு வந்து தன் பட்டத்து யானையின் காற்கீழ் இட்டுக் கொல்லப் புகுந்தவழி, கோவூர்கிழார் அறிவுரை ஏற்ற, அப்பழிமிகு செயலைச் செய்யாது காக்கப் பெற்றவன்58 இம்மூன்று நிகழ்ச்சிகள் தவிர்த்து, அவன் கொற்றம் புலவர்களால், பொதுவாகப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளது. அது போலவே, அவன் கொடை வளமும் பாராட்டப்பட்டுளது.

இவன் காலத்தில், பகைவென்று கொண்டு வரும் பொருள்களே அல்லாமல், தன்நாட்டு நிலங்களுக்கு வரிவிதித்துப் பெறும் பொருளும், அரச வருவாயாகும்: