பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

 கின்றனர். இனங்காண வேண்டுவது வரலாற்று ஆசிரியர் கடன்.

தித்தன்

சோழர் குலம் விளக்கும் கிள்ளி, சென்னி, வளத்தான், வளவன் என்பன போலும் சிறப்பு அடை பெறாமல்,தித்தன் என வறிதே அழைக்கப்பெற்றுளான் இவன். இவன் சோழன் என்பது, இவன் தலைககர் உறந்தை ஆம் எனப் பரணர்71 (அகம் : 6,122,226 புறம் : 352) பல இடத்திலும் கூறியிருப்பதால் உறுதி ஆகிறது.

இவனுக்குப் போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்ற மகன் ஒருவன் இருந்தான் என்றும், அவன், முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனை வென்றான் என்றும், மகன் பெற்ற வெற்றியையும் காண மறுக்குமளவு, தித்தன் மகன் மீது சினம் கொண்டிருந்தான் என்றும், சாத்தந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடல்72ஒன்றின் கொளுவால் தெரிகிறது.

கட்டி என்ற வடநாட்டு மற்போர் வீரன் பாணன் என்ற தன் நண்பன் துணையோடு, தித்தன் வெளியனை, மற்போரில் வெல்லக் கருதி வந்தும், தித்தன் வெளியன் நாளோலக்கத்தில், புலவர்கள் பாராட்டில் அவன் வெற்றிச் சிறப்பினை விளங்க உரைக்கக் கேட்ட அளவே, போரிடும் கருத்தையே கைவிட்டு ஓடிவிட்டதைப் பரணர் பாராட்டியுள்ளார்.73

சாத்தந்தையார் பாராட்டிய தித்தனும், பரணர் பாராட்டிய தித்தன் வெளியனும் உறையூர்க்கு உரியவ-