பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


40."பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
ஓடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல, ஒடுவை"

-அகம்.125


41."பல் ஒளியர் பணி பொடுங்கத்
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக், குடவர் கூம்பத்,
தென்னவன் திறல் கெடச், சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மரத் தானை, மறமொய்ம் பின்,
செங் கண்ணாற் செயிர்த்து நோக்கிப்
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாய"

-பட்டின.274.82


42."செருவெங் காதலிற் றிருமாவளவன்
இமையவர் உறையும் சிமையப் பிடர்த் தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர் வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகை புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவத்தோங்கு மரபிற் றோரண வாயிலும்"

-சிலம்பு.5.90.104

43.கலை மகள். 1932 பகுதி 1, பக்கம் 62,63

44."பொன்னிக் கரை கண்ட பூபதி"

-விக்கிரம சோழன் உலா-26