பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

1. அண்டர் மகன் குறுவழுதியார்

பாண்டியர் தொல்குடியாம், ஆயர் குடியாம் அண்டர் குடிவந்தவர். மலைப்பாறைகளில், வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடப்பதை இரவில் காணும் யானைகள், புலியெனக் கொண்டு அஞ்சி ஓடும் காட்சியையும்,63 தோழி தலைவனுக்கு, "நின் தேரை மணல் மேட்டில் நிறுத்திவிட்டு, இரவு வந்து செல்க" என இரவுக்குறி நேர்தலைதயும், தான் விரும்பும் ஒருபெண்ணை அவள் தந்தை தர மறுக்க, வலிந்து கொண்டு செல்ல முயல்வதாம் 'மகட்பாற் காஞ்சி' என்ற துறை அமைந்த பாடலையும் 65 பாடியுள்ளார்.

2. அறிவுடைநம்பி :

அறிவுடைநம்பியின் அரசியல் பணியாளர் குடிகளிடம் பெறவேண்டிய வரிகளைப் பெறவேண்டுமளவு பெறாது, அளவின்றிப் பெறத்தொடங்கியபோது, பிசிராங்தையார் கூறிய அறிவுரை கேட்டுத் தன் பணியாளர்களைக் கட்டுப்படுத்தியவன்.66 மக்கள் செல்வத்தின் பெருமையைப் பார் அறியப் பாராட்டிப் பாடியவன்.67 திருமணம் செய்து கொள்ளாது வந்து செல்லும் தலைவனை வரைந்து கொள்ளுமாறு அறிவுரை கூறும் தோழி கூற்றுஅமைந்த பாடலையும்68 பாடியுள்ளார்.