பக்கம்:தமிழக வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழக வரலாறு


ஆண்டுகளுக்குப் பின் வந்த சிலர் கூற்றுமட்டும் ஏற்கக் கூடியதோ? இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் கூறும் ஒவ்வொன்றும் எப்படிப் பொருந்துவதாகும்? எனவே, வரலாறே இல்லையாகி விடுமே.

மோரியரோடு பிணைத்தால் மாமுலர் கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது உறுதி பெற்று, அதனால் அதற்கு முன்பே தமிழ் இலக்கியம் தழைத்திருந்தது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே என்ற ஒன்றிற்காக அறிஞர்கள் இவ்வாறு வலிந்து பல கருத்துக்களைப் புகுத்தல் முறையன்று என்று வேண்டி இந்த அளவோடு இதை விட்டு மேலே செல்லலாம்.

மோரியர் காலம் இந்திய வரலாற்றிலேயே சிறந்த காலம். கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஸாண்டர் படை எடுத்து வந்ததும், கிரேக்க நாட்டு மெகஸ்தனிஸ் (கி.மு. 302) இந்நாட்டுக்குத் தூது வந்ததும் வரலாற்றுக்குச் சிறந்த மைல்கற்க ளல்லவா? இப்படி மேற்கும் வடக்கும் இணையத் தொடங்கிய அந்த வரலாற்றுத் தொடக்க நாளில் நம் தமிழகமும் அனைத்திலும் சிறக்க, இன்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் பிறநாட்டினருடன் தமிழ் மக்கள் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றால் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று கொள்வதில் இழுக்கு என்னையோ!

சமயத் தொடர்பு :

வடக்கே பாடலியில் வாழ்ந்த நத்தரை வென்று அரசோச்சிய சந்திரகுப்தன் மகனே பிந்துசாரன். இவன் மைசூர் நாட்டில் இன்றும் சைனர்தம் பெருங்கோயிலாகப் போற்றப்படும் சிரவண வலகொலாவில் மறைந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/106&oldid=1357747" இலிருந்து மீள்விக்கப்பட்டது