பக்கம்:தமிழக வரலாறு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழக வரலாறு


யருடன் இணைந்த ஒரு சிற்றரசாக இருக்க வேண்டும். அக்காலத்திலேயே சோழர்கள் பெருங்கடற்படையுடன் இருந்தார்கள் போலும்.[1]

மேற்கண்ட மாமூலனார் பாடலினால் நான்மொழிக்கோசருக்கு உதவியாகவே மோரியர் வந்து மோகூரைத் தோற்கடித்தனர் என அறிகின்றோம். இந்த நான் மொழிக் கோசர் யார்? அவர்கள் சிறந்த வீரர்கள் எனத் தெரிகின்றது. ‘செம்மற் கோசர்’, ‘புனைதேர்க் கோசர்’ என்று இவர்கள் பேசப்படுகின்றனர். இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ‘சத்திய புத்திரர்’ என்பர். இருவரும் ஒருவரா, அன்றி வெவ்வேறு இனத்தவரா என்பது அறிஞரால் இனி ஆராயப் பெற வேண்டிய ஒன்றாகும்.

சந்திரகுப்தனும் பிந்துசாரனும் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகினர். இருவரும் மைசூர் நாட்டுச் சிரவண வலகொலா என்ற சமயப் பேரூருடன் தொடர்புகொண்டவர். சந்திர குப்தன் கெளடில்யர் என்ற பிராமணரை உடன் வைத்திருந்த போதிலும் அவன் சமண சமயத்தைச் சார்ந்தவனே என்பர் ஸ்மித்து[2] அவர்களுக்குப் பின் வந்த அசோகனோ பெளத்தன். எனவே, அம்மூவர் வழித் தமிழ் நாட்டில் பெளத்தமும் சமணமும் பரவலாயின. முதன் முதலாகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேதான் தமிழ் நாட்டில் இந்த இரண்டு சமயங்களும் மோரியர் வழியே கால் கொள்ள ஆரம்பித்தன. பின்னர் இவையே அரசியலைக் கொண்டு நிர்ட்டில் சிறந்து ஓங்கின என்பதை அக்கால எல்லையில் நின்று காண்போம். எனவே, வரையறுத்த தமிழ்நாட்டு வரலாற்றுக் காலத்துக்கு முன்


  1. The Easly History of India, P 144
  2. The Easly History of India, P 144
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/108&oldid=1357759" இலிருந்து மீள்விக்கப்பட்டது