பக்கம்:தமிழக வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

129


திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள்.[1] நேற்றுவரை இருந்த திருவாங்கூர் அரச பரம்பரையும் மருமக்கள் தாயவழி இயங்கி வந்ததென்றமையின். அது ஒருவேளை அன்றே தோன்றியிருக்கலாமோ என ஐயுற வழியுண்டு. இத்துறையில் மேலும் ஆராய்ச்சி தேவை.

இனி, சேர அரசருள் இமயம் வரை சென்ற வேந்தரும் உள்ளனர். ஒருவன், ‘இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்’ என்றே வழங்கப் பெறுகின்றான். அவன் இமயம் வரை படை எடுத்துச் சென்று மாற்றாரை வென்று, இமயத்தில் தம் விற்கொடியை நாட்டி வந்தான் என்பர். தமிழ் வேந்தர் மூவருமே இமயத்தில் தத்தம் கொடியைப் பொறித்தனர் என்ற உண்மையை,

கயல் எழுதிய இமய நெற்றியில்
அவல் எழுதிய புலியும் வில்லும்’ (சிலம்பு 17.1&2)

என்ற அடிகள் நினைவூட்டுகின்றன. எனவே, இமயவரம்பன் வடநாடு நோக்கிச் சென்று வெற்றி கண்டான் என்பது பொருந்தும். இனிச் செங்குட்டுவனைச் சங்க காலத்துச் சேரர் பரம்பரையிலேயே சிறந்த மன்னனாய்க் காண்கின்றோம். சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் முழுதும் அவன் வெற்றி பற்றியதேயாகும். அவனும் மன்னோர் போன்று இமயம் வரை சென்று வெற்றி கண்டவன். அவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்த காலம் அவனது முதுமைக் காலமேயாகும். அவன் இளமையிலேயே ஒருமுறை இமயத்துக்குப் படை எடுத்துச் சென்றான்; தன் தாயின் விருப்பப்படி அவள் படிமத்தைக் கங்கை நீராட்டச் சென்றான் என்பர் அந்தக் காலத்தில் கடைச்சங்கம் இருந்திருக்கலாம். ஆனால், பின்பு கண்ணகிக்காக இமயம் சென்ற காலை கடைச்-


  1. சேரர் தாயமுறை-ச. சோ. பாரதயார்.9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/131&oldid=1358362" இலிருந்து மீள்விக்கப்பட்டது