பக்கம்:தமிழக வரலாறு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழக வரலாறு


பொழுது போக்கும் காட்சி சிறந்த காட்சியாகும். இவ்வாறு குறிஞ்சி நிலமக்கள் தங்கள் நிலத்தில் படுபொருள்களாலேயே தம் வாழ்வினைச் செம்மையாக்கிக் கொண்டார்கள். அவர்கள் தெய்வம் முருகன்.

முல்லை:

முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமுமாகும். அதில் ஆயர்குல மக்கள் வாழ்ந்தார்கள்; மாயோனைத் தெய்மாகக் கொண்டார்கள்; காட்டில் நிறையப் புல் விளையுமாதலால், மாட்டினை மேய்த்து அதன் பயன் கொண்டு வாழ்ந்தார்கள். வன விலங்குகளை வேட்டையாடும் வேடர் கூட்டமும் இருந்தது எனலாம். பசுக்களோடு பெண்கள் விளையாடுவதும், மாலை வேளையில் முல்லை மலர் சூடி, முல்லைப் பண் பாடி, வீடு தேடி விரும் காளைகளையும் கன்றுகளையும் பசுக்களையும் எதிர் நோக்கி, அவற்றின் வழித் தம் வாழ்க்கைத் துணைவரை வழிமேல் விழி வைத்துக் காணும் ஆயர்குலப் பெண்களின் வாழ்வும் சிறந்து நிற்பதாகும். அவர்கள் வந்த விருந்தினருக்குப் பாலும் தயிரும் தந்து நலம் புரக்கும் செயல் சிறந்த ஒன்றாகும். கொல்லேறு தழுவுதல் முதலிய வீரச் செயல் விளைக்கும் காளையரும் அவரைக் கண்டு காமுறும் கன்னியரும் மணம் செய்து வாழும் முல்லை நில வாழ்வு எல்லை இல்லா இன்பம் தருவதாகும்.

மருதம்:

மருத நிலத்து மக்கள் மற்றவரினும் சற்று மெய்வருந்தி உழைப்பவர் எனலாம். மலையில் பெய்யும் மழை, காட்டு வழியே வற்றிய சருகுகளையும் வண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/138&oldid=1358379" இலிருந்து மீள்விக்கப்பட்டது