பக்கம்:தமிழக வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழக வரலாறு


‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டிார் வந்தே
நந்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து

நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே’

என்று இன்றைய பாரதியார், அன்றைய முத்துக்குளியலைப் பாராட்டினார். இன்றும் தென்பாண்டி நாட்டில் முத்துக் குளியல் நடைபெறுகிறது இவ்வாறு முத்தையும் பல வகைப்பட்ட மீன்களையும் கொணர்ந்து, கடல் வளத்தை வாரியளித்த இந்தப் பரதவர், தம் வீட்டுக்கு வருவோரைத் தம் பொருள்கொண்டே உபசரிப்பர். இவர்கள் உணவுக்குத் தேவையான உப்பை விளைப்பவர்கள். கடல்மேற் சென்ற கணவர் வரும் வழியையும் அவ்வழியில் உள்ள அல்லல்களையும் எண்ணி எண்ணிப் பரதவப் பெண்கள் பல நாட்கள் கண் விழிப்பதுண்டு. இத்தனை அல்லலிலும் அவர்கள் வாழ்வு இன்பமாகத்தான் கழிந்தது. நெய்தல் பறை முழக்கி, நெய்தற் பண் பாடி, தாழையும் புன்னை மலரும்குடி, அவர்கள் ஆடிப்பாடி நிற்கும் காட்சி காணற்கினிய காட்சியாகும். வருணன் அவர்தம் தெய்வமாவன்.

பாலை:

பாலை தனி நிலமன்று. எனவே, அதில் வாழும் மக்களுக்கும் தனித்த தொழில் இல்லை அதில் வாழும் மாந்தர் தொழிலற்றவராகவே ஆறலைக் கள்வராயினர். வருவோர் போவாரையெல்லாம் வழி மறித்துப் பொருள் பறிக்கும் வன்கண்ணர்களாய் அவர்கள் காட்டப் பெறுகின்றார்கள். தமக்கெனத் தனி வாழ்க்கை நடத்த, விரிந்த பரப்பாகிய அப்பாலை நில அன்னை அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/140&oldid=1358387" இலிருந்து மீள்விக்கப்பட்டது