பக்கம்:தமிழக வரலாறு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழக வரலாறு


அரசர்வழி அந்தச் சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்தன என்றாலும், அறிவறிந்த மக்கள் காட்டிய அறநெறி வழி நாடு பெரும்பாலும் அமைதியிலேயே இருந்தது எனலாம்.

கல்வியும் கலையும்:

அக்காலத்தில் கல்வி சிறந்த நிலையில் இருந்தது எனலாம். சாதாரணக் கிராம மக்கள் கூடக் கற்றறிந்தவராய்த் தம் அரசர்முன் அஞ்சாது தம் கருத்தை உரைக்கும் வகையில் இருந்தனர் எனக் காண்கின்றோம். சாதாரண உரையாடல்களும் பாடல்களாகத் தோன்றுவதைப் பார்க்கும்போது அவர்தம் கல்வியின் உச்சநிலை நன்கு தெரியும். மக்கள் கல்வியின்மேல் கொண்ட அவாவினைக் கருதி அரசரும் கல்வி நிலையங்களையும் கலைக்கூடங்களையும் தோற்றுவித்து வளர்த்தனர் எனலாம். பிற நாட்டு மக்களும் இங்கு வந்து இந்நாட்டு மக்களோடு கலந்து கலை நலமும் வாணிப வளமும் பெற்றார்கள் என்பதை விளக்கச் சான்றுகள் உள்ளன. கல்வியை அரசர்கள் வளர்த்துப் போற்றி வந்தார்கள் என்பதை அவர்கள் புலவர் வாய்ச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட ஒன்றே காட்டும். ஒரு காலத்தில் வேந்தர் ஒன்றி வாழவில்லை என்றும், அவர்கள் ஒன்றியிருக்கக்கண்ட ஒளவையார் அவர்களைப் போற்றினார் என்றும் புறம் காட்டுகிறது. புறம் 367ம்-பாடல் சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்போர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரைப் பாடியது என்றும்,

‘முத்தீப் புரையக் காண்டக இருந்தனிர்

கொற்ற வேண்குடைக் கொடித்தேர் வெந்திர்!
(புறம் 367)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/144&oldid=1358403" இலிருந்து மீள்விக்கப்பட்டது