பக்கம்:தமிழக வரலாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

143


என ஒளவையார் அவர்களை விளித்தார் என்றும் காண்கிறோம். உக்கிரப் பெருவழுதி கடைச்சங்கத்து இறுதியில் வாழ்ந்தவன். மற்ற இருவரும் அக்காலத்தில் சேர சோழ நாட்டை ஆண்டவர்களாய் அவனுடன் நண்பினராய் இருந்தனர் போலும்! எனவே, பரந்த தமிழ் உள்ளத்தில் குறுகிய பிரிவு மனப்பான்மையும் மாறுபட்ட எண்ணங்களுங்கூட இருந்தன எனலாம்.

கல்வியோடு கலையும் உடன் வளர்ந்தது. நகரங்களை நம் முன் கொண்டுவந்து நிறுத்தும் புலவர்கள், அந்நகரங்களில் அமைந்த பல்வேறு கலை நலங்களையும் காட்டத் தவறவில்லை. புகாரும் மதுரையும் கலைக்கோயில்களாய் விளங்கின. கட்டடங்களில் சுதை கொண்டு தீட்டிய ஓவியங்களை எண்ணாதிருக்க முடியவில்லை கட்டடக் கலையோடு இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கலைகளும் நன்கு போற்றப்பட்டன. இசை நூல்கள் சில இருந்தன என்றும் அவை மறைந்தன என்றும் காண்கிறோம். ஆற்றுப்படைகள் இசை வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நாடக அமைப்பிலே சில பாடல்கள் அமைந்துள்ளன. இசைக் கருவிகள் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. இயற்றமிழ் உச்சநிலையில் இருந்தது, இவைகளையன்றி, வெளிநாட்டார் இங்கு வந்து தத்தம் கலை நலம் காட்டி, நமது கலை நலத்தையும் கொண்டு கென்றார்கள் என்பதும் ஓரளவு புலனாகின்றது; ‘மான் கண் கால் அதர் மாளிகை இடங்களை’ எண்ணும்போது அக்காலக் கட்டட அமைப்பும் புலனாகின்றது. அதைப் போன்ற ஆடை வகையிலும் பல்வேறுவகை ஆடைகளைக் காண்கிறோம். ‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும், கட்டு நுண்னினைக் கம்மியர்’ தனித்தனியாக வாழ்ந்த தெருக்கள் நகரங்களில் இருந்தன. அதை எண்ணும்போது அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/145&oldid=1358414" இலிருந்து மீள்விக்கப்பட்டது