பக்கம்:தமிழக வரலாறு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

145


வாணிபர் வந்து தங்கி, வாணிபம் செய்ய வழி செய்து தந்தார்கள். யவனர்கள் அவ்வாறு வந்து தங்கிப் புகாரிலும் மதுரையிலும் இருந்தார்கள் என்பதும் அவர்கள் வாழிடம் தனியாக‘ யவனர் இருக்கை’ என வழங்கப்பட்டது என்பதும் அறிகின்றோம். அன்று பல்வகைப்பட்ட வாணிபங்கள் நடைபெற்று வந்தன. சில கடைத் தெருக்கள் இரவில் திறந்திருக்கும்; சில பகலில் திறந்திருக்கும்; அவை அல்லங்காடி, நாளங்காடி என வழங்கப் பெற்றன. இன்றும் சிங்கப்பூர் போன்ற பெருநகரங்களில் அவை போன்ற கடைத் தெருக்களைக் காணலாம், ஏன்? மதுரையிலே இராப் பகலற்ற சிற்சில இடங்களை ‘ஆலை’ இயங்கும் இந்நாளிலும் காண இயலும் மற்றும் ஒவ்வொரு பொருள் விற்பவரும் தனித்தனியாகத் தனித்தனித் தெருவில் வாணிகம் செய்து வந்தனர். அவர் தம் வாணிபத்தைக் குறிக்கத் தனித்தனிக் கொடிகள் இருந்ததாக அறிகிறோம். வானுற ஓங்கிய கம்பத்து உச்சியில் ஆடும் கொடிகளைக் கொண்டே அங்கு நடை பெறும் வியாபாரத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ‘கூலம் குவித்த கூல வீதி’ என்று நவதானியங்கள் விற்கும் கடைத் தெருவினைத் தனியாகக் குறிப்பிடுகின்றார் புலவர். இவ்வாறே பிற வாணிபத் தெருக்களும் சிறந்திருந்தன.

மக்கள் உழலையும் வாணிபத்தையும் சிறந்த முறையில் அக்காலத்தில் போற்றினார்கள் என்பது நன்கு புலனாகிறது. அக்காலத்தில் சோம்பலின்றி உழுது பயிரிட்டும், வாணிபம் செய்தும் பொருள் பெருக்கிக் பெற்றது கொண்டு சுற்றம் அருந்தி வாழ்ந்த வகை உலகறிந்த ஒன்று. இனி, இம்மக்கள் இன்றே போலப் பல்வேறு சாதிப் பகுப்பால் பிரிக்கப்-

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/147&oldid=1358422" இலிருந்து மீள்விக்கப்பட்டது