பக்கம்:தமிழக வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழக வரலாறு


பட்டு வாழ்ந்தவர்களா, அன்றி ஒன்றி வாழ்ந்தார்களா என்பது காணல் வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் கூறிய நாட்டில், அன்றே இன வேறுபாடு தோன்றிவிட்டது எனலாம். எனினும் வாழ்வில் மக்கள் அனைவரும் கூடியே வாழ்ந்தார்கள். செய்தொழில் வேற்றுமையான் அவர்கள் பெயர் பிரிக்கப்பட்டதேயன்றி, சாதியால் அன்று. கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார், மருத்துவன் தாமோதரனார் கணக்காயனார் மகனார் நக்கீரனார், பொற்கொல்லன் என இவ்வாறு தொழிலால் வேறுபாடு இருந்ததே ஒழியப் பிறப்பால் வேறுபாடு இல்லை. என்றாலும், ஆற்றுப்படை நூலுள் தனியாக மறையவர் வாழிடங் கூறி, அவர் உண்ணும் மரக்கறி உணவினைக் காட்டி விளக்குவதனாலும் தொல்காப்பியத்திலேயே இன மரபுகளின் பெயர்கள் காணப்படுகின்றமையாலும் இந்தச் சாதி வேறுபாடுகள் அக்காலத்தில் தமிழ் நாட்டில் பிறரால் புகுத்தப்பட்டனவாகி வேரூன்றா நிலையில் இருந்திருக்கலாம் எனக் கொள்ளல் பொருந்தும்.

வடக்கும் தெற்கும்:

சங்க காலத்துக்கு முன்பே வடக்கும் தெற்கும் இணைந்திருந்தன என மேலே கண்டோம். வடவிந்தியாவில் வாழ்ந்த ஆரியர் சங்க காலத்துக்கு முன்பே தமிழ் நாட்டில் வந்தவராதல் வேண்டும். அவர் தம் சாதி வேறுபாடு முதலியவற்றையும் இங்குக் கொண்டு வந்து புகுத்தி இருக்கலாம். எனினும், கடைச்சங்க கால இறுதிவரை தமிழர் பிறர் ஆதிக்கத்தில் கட்டுப்படாது தலை நிமிர்ந்து நின்ற காரணத்தால், ஆரியர் தம் பழக்க வழக்கங்கள் வளர்ந்தோங்க வழி இல்லாது போயிருக்கலா மன்றோ! பின் களப்பிரர் போன்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/148&oldid=1358428" இலிருந்து மீள்விக்கப்பட்டது