பக்கம்:தமிழக வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழக வரலாறு


நாட்டு வரலாறுகளை நமக்கு மிக அண்மையில் கொண்டு வரச் சிலர் விரும்பமாட்டார் என்பது உண்மைதான். எனினும், வரலாற்றுக் கண்கொண்டு காணும்போது உள்ளது சிறக்கத்தானே வேண்டும்! மேலும் பாரத இராமயணங்களைப்பற்றி அவை வெறுங்கதைகளென்றும் அவை வரலாற்றுக்குப் பயன்படா என்றும் ஸ்மித்துக் காட்டுகிறார்.[1] எனவே, இந்த அளவோடு அதுபற்றி ஆராயாது நாமும் நிறுத்திக்கொள்வோம்:

இலக்கியத்தில் இடம்பெறுகின்றன:

இராமாயண பாரத வரலாறுகள் பல சங்க இலக்கியங்களில் இடம் பெறக் காண்கிறோம். எனவே, அக்கதைகள் நாட்டு வழக்கத்தில் வந்துவிட்டதோடு, அவற்றின் வழி ஆரியர்தம் தமிழ்நாட்டு வாழ்வும் நமக்குப் புலப்படுகிறது எனலாம். தெய்வங்களைக் குறிக்கும் சமய இலக்கியங்களில் பலராமன், கண்ணன் போன்றாரும் பேசப்பெறுகின்றன. வடமொழியிலுள்ள சில இலக்கியக் கருத்துகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. இதே வேளையில் வடக்கே கங்கைக் கரையில் வேத காலத் தெய்வங்கள் வீழ்த்தப் பெற, புதிய தெய்வங்கள்–பெளத்த சமண சமயத் தெய்வங்கள்–தோன்றி வளரலாயின என்பர் ஆய்வாளர். எனவே, வாழ்விழந்த அந்தத் தெய்வங்களை இங்குத் தென்னாட்டில் கொண்டுவந்து நிறுத்த முயன்றார்கள் ஆரியர்கள் எனலாம், அவர்தம் முயற்சி அந்தச் சங்க காலத்திலே முழுப்பயன் தரவில்லை என்றாலும், அடுத்த


  1. They are the creatures of imagination. The heroes are like the knights who appear in the Round Table of British Legends,-Histoy of India p. 31.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/150&oldid=1358436" இலிருந்து மீள்விக்கப்பட்டது