பக்கம்:தமிழக வரலாறு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

149


நூற்றாண்டுகளுக்குள்ளேயே நிலைக்கும் வகையில் இடம் பெற்று விட்டதெனலாம். எனினும், அவையும் பின் வந்த சமண, பெளத்த சமயச் சூறாவளியில் சிக்கிப் பின் ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு ஏற்ற வகையில் பெற்ற சில மாற்றங்களுடன் தலைநிமிர்ந்து வாழத்தொடங்கி இன்று வரையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றன் எனலாம். அவற்றின் விரிவுகளையும் வாய்ப்பு நேர்ந்துழி அங்கங்கே காணலாம்.

தெய்வங்கள்:

சங்க இலக்கிம்ங்களிலே சிவன், திருமால், முருகன் போன்ற தேவர்கள் பேசப்பெறுகின்றார்கள். முருகன் திருமால், இந்திரன், வருணன், துர்க்கை போன்றார் திணை நிலத் தெய்வங்களாகக் காட்டப்பெறுகின்றனர். அத்தேவர்கள் தோன்றி வளர்ந்த வகையினையும் வரலாற்றினையும் அறிஞர்கள் பல்வேறு வழியில் ஆராய்ந்துள்ளார்கள். முருகன் எப்படிக் குறிஞ்சி நிலத் தெய்வமானான் என்பதையும், எப்படிச் செவ்வேளாகிச் சிறந்தான் என்பதையும் பிறகு எப்படிச் சுப்பிரமணியனாகவும் கார்த்திகேயனாகவும் வடமொழி வாணர்வழி மாற்றப்பட்டான் என்பதையும் திரு.வி. க.வின் ‘முருகன் அல்லது அழகு’ என்பது போன்ற பல நூல்கள் நன்கு எடுத்துக் காட்டும். கரிய காட்டினைக் கண்டு கசிந்துருகி, நின்ற நீண்ட மரங்களையும் கரிய நிறத்தையும் பிணிக்க, நீண்ட உருவுடைய திருமால் தோன்றிய விதமும், பின் அவனது எல்லையற்ற காலம் கடந்த நிலையும் பின் அவன் விஷ்ணுவான வரலாறும் பரிபாடல் போன்ற இலக்கியங்களும் பிறவும் கூறுவன, மருநில வேந்தன் மண்ணாள் வேந்தனாகிப் பின் விண்ணாள் வேந்தனாகிய இந்திர நிலை பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/151&oldid=1358438" இலிருந்து மீள்விக்கப்பட்டது