பக்கம்:தமிழக வரலாறு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழக வரலாறு


காலத்திலேதான் தமிழில் பெருங்காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றின எனலாம்.

காப்பிய கால மாற்றம்:

சங்க காலத்தை ஒட்டியதுதான் காப்பிய காலம். சங்கத்திருந்த புலவர் பலர் காப்பிய காலத்திலும், வாழ்த்திருக்கக்கூடும். சங்க காலத்தில் தன் முற்பகுதியைக் கழித்த செங்குட்டுவன் பிற்காலத்தில் இக்காப்பியங்கள் எழுந்த போதும் நாட்டில் இருந்த நிலையை நன்கு உணர்ந்திருப்பான். பெளத்தமும் சமணமும் வைதிக சமயமும் நாட்டில் பரவ ஆரம்பித்தன. வைதிக சமயத்தவனாகிய மாடலன் சிலப்பதிகாரத்திலே ஒரு முக்கியமான பாகத்தை வகிக்கின்றான். சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோ அடிகளோ சமணர். அவர் நண்பரும் மணிமேகலைக் காப்பியம் செய்தவருமாகிய சாத்தனார் தீவிர பெளத்த சமயவாதி. இப்படி வெளியிலிருந்து வந்த மூன்று சமயங்களின் சேர்க்கையும் வளர்ச்சியுமே இரண்டு காப்பியங்களில் காணப்பெறுகின்றன. எனினும், சங்க காலத்தில் தனித்திருந்த தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கையும் போக்கும் ஒரளவு நிலை பெற்று அடியோடு மறைந்து கெட்டு மாறா வகையில் வாழ்ந்தன எனலாம்.

மன்னர்கள்:

சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரண்டும் புகார் நகரில் தொடங்கி வஞ்சியில் முடிவனவேயாம். மணிமேகலை காஞ்சியையும் பிணிக்கிறது. சிலம்பு மதுரையின் வாழ்வைக் காட்டுகிறது. புகாரில் தோன்றிய கோவலன் மதுரையில் கொலையுண்ண, வஞ்சி சேர்ந்த கண்ணகிக்குக் கோயிலெடுப்பித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/156&oldid=1358087" இலிருந்து மீள்விக்கப்பட்டது