பக்கம்:தமிழக வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழக வரலாறு


வனே.பாண்டியன் நெஞ்செழியனுக்குப் பின் அவன் மகன் வெற்றிவேற்செழியன் பட்டத்துக்கு வந்தான். இப்படிப் பாண்டியரும் சோழரும் வலிகுன்றி வாழ, செங்குட்டுவனோ இமயம் வரைபடை எடுத்து வெற்றி கண்ட வீரனாய் விளங்கினான்.

புகார் நகரம்:

சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டுமே புகார் நகரைப் பற்றி நன்கு விளக்குகின்றன. இளங்கோவடிகள் அப்புகாரின் வாணிப வளத்தையும் பிற சிறப்பியல்புகளையும், கலைகளையும், விழாக்களையும் நன்கு காட்டுகின்றார். பல்வேறு வகைப் பண்டங்கள் அங்குக் கடற் கரையில் வந்து இறங்கின எனவும், அவற்றைச் சோழர் தம் புலி முத்திரை இட்டு உள்நாட்டிற்கு அனுப்பினர் எனவும், அதே போன்று முத்திரை இட்டுப் பல பண்டங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினர் எனவும் கூறியுள்ளனர். இக்காலத்துச் சுங்கச் சாவடிகள் இருந்தன என்பது தேற்றம், அச்சாவடிகளில் வந்து இறங்கிய பொருள் களைக் கூறும் போது,

‘நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குண்கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத்து ஆக்கழும்’[1]

புகாாக் கடை வீதிகளில் நிறைதிந்ருந்தன என்கின்றார். எனவே, அன்று வாணிபம் சிறந்து நின்றதென்பது ஒரு தலை. மேலும், அப்புகார் நகரப் பிரிவுகளையும், அங்குள்ள கோயில்களையும் காட்டும்போது அது இன்றைய நகரங்களிலும் மேம்பட்ட ஒன்று என


  1. 1. பட்டினப்பாலை, அடி: 185-91
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/158&oldid=1358099" இலிருந்து மீள்விக்கப்பட்டது