பக்கம்:தமிழக வரலாறு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

161


மறையவன் ஆதிக்கத்தில் தமிழ் நாட்டின் தலைசிறந்த மன்னன் செங்குட்டுவன் இருந்தான் என்பது தெரிகிறது. மேலும் கோவலன் மணநாளில் ‘மாமுது பார்ப்பான் மறை, வழி காட்டிட,’ அவன் மணந்தான் என்பதால், மணமுறையின் மாற்றமும் தெரிகின்றது. இவ்வாறு சில நிகழ்ச்சிகளும், மணிமேகலையில் ஆபுத்திரன் வரலாறு வழிக் காணும் நிகழ்ச்சிகளும் தமிழ் நாட்டில் வைதிக சமயத்தவர்தம் செல்வாக்கு அதிகமாகும் காலமாய் அது அமைந்தது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், அதே வேளையில் அடுத்து வந்த சமணமும் பெளத்தமூங்கூட அக்காலத்திலேயே இங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின எனலாம். இளங்கோவடிகள் சமணர். அவர்தம் கொள்கையை அதிகமாகத் தம் நூலினுள் புகுத்தாவிடினும், கவுந்தி அடிகள் மூலம் சில கொள்கைகளை வலியுறுத்துகின்றார். குளங்களில் மூழ்க வேண்டும் என்ற வைதிக சமயத்தவர் கொள்கையை மறுத்து, மூழ்கித்தான் முற்பிறப்பு உண்மை அறிய வேண்டும் என்பது இல்லை என்ற கொள்கையை

‘இறந்த பிறப்பில் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணா யோநீ?’

எனக் காட்டியும், இன்னும் பலவாறும் மறுத்துத் தம் சமயக் கொள்கை இன்ன வழியது என்று நன்கு விளக்குகிறார். இளங்கோவடிகள் சமணராயினும், இவர் அண்ணன் செங்குட்டுவன் சைவனாயினும், இருவரும் ஒன்றியே வாழ்கின்றனர். தம் அண்ணனை இவர்,

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/163&oldid=1358109" இலிருந்து மீள்விக்கப்பட்டது