பக்கம்:தமிழக வரலாறு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

163


கதைகள்:

மணிமேகலையில் பல கதைகள் வருகின்றன. அவற்றுள் கற்பனையே அதிகம் உள்ளது என நினைக்க வேண்டியுள்ளது. மணிமேகலா தெய்வத்தின் கதையும், காயசண்டிகையின் கதையும், ஆபுத்திரன் கதையும், சாதுவன் கதையும் சிந்திக்கற்பாலன. எனவே, மணிமேகலையின் பெரும் பகுதி வரலாற்றுக்கு அப்பாற்பட்டதேயாகும். என்றாலும், புகாரும், வஞ்சியும், காஞ்சியும் வரலாற்றுக்குத் துணை செய்கின்றன. மணிமேகலையில் புகாரிலே பல்வேறு வகைக் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடப் பெற்றுள்ளது. சங்க காலத்தே காணாத அத்துணைக் கோயில்கள் தமிழ் நாட்டுத் தலைநகரில் அவ்வளவு விரைவில் எப்படி இடம் பெற்றன என்று எண்ணத் தோன்றும். எனினும், கரிகாலன் காலத்துக்குப் பின் அரை நூற்றாண்டுக்கு மேல்யாரும் தக்க அரசர் ஆண்டு இல்லாமையானும், அதே வேளையில் பிற நாட்டார் சாரிசாரியாய்த் தமிழ் நாட்டில் புகுந்தமையாலும் இந்தப் பெருமாறுதலுக்கு இடமுண்டு என நினைக்க வேண்டியுள்ளது. இந்த மாறுதலே பின்வரும் இருண்ட கால எல்லைக்கு வித்து ஊன்றிற்று எனலாம்.

சாதுவன் கதை மூலம் சாத்தனார் தம் பெளத்தக் கொள்கையை வற்புறுத்துகின்றார். புலால் உணவும் கள்ளும் சிலரால் விரும்பப்படாத பொருள்களெனினும் அவை சங்க இலக்கியங்களால் மறுக்கப்படவில்லை. அதற்கு மாறாக அவை புலவர்களால் போற்றிப் பேசப்படுகின்றன எனல் பொருந்தும். சங்க காலத்தில் இறுதியாக அரங்கேற்றிய திருக்குறளில் அவை மறுக்கப் பெறுகின்றன. சமணமும் பெளத்தமும் இரண்டையும் அடியோடு வெறுப்பன. எனவே, அவை தம் கொள்கையை அதிகமாகப் பரப்பின எனலாம் சாதுவன் முதுமகனுக்கு அறிவுரை கூறும் முகத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/165&oldid=1358113" இலிருந்து மீள்விக்கப்பட்டது