பக்கம்:தமிழக வரலாறு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழக வரலாறு


மக்களைத் தமிழகத்துள் நுழையவிட்டதில் இவர்களுக்கும் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா?

ஆந்திர நாட்டிலும் இரண்டொரு பேரரசுகள் கிளைத்தன எனலாம். ஆந்திரநாட்டு வரலாறு அதற்கு முன் திட்டமாக அறிய முடியாதது; என்றாலும் அது தமிழ் நாட்டு எல்லையில் முடியுடைத் தமிழ் வேந்தர் தம் ஆணையுடன் இணைந்தோ தனித்தோ அமைதியாக வாழ்ந்தது என்று கொள்ளலாம் எனினும், தமிழ்நாடே நிலைகெட்டபோது ஆந்திரத்திலும் பலப்பல அரசுகள் தோன்றலாயின. அவற்றுள் ஒன்றின் தலைவனே புழுமாயி என்பவன் இப்பெயரோடு சிலர் வாழ்ந்தனர் போலும்! அவருள் சிறந்தவன் இரண்டாம் புலுமாயி. இவன் காஞ்சியைக் கைப்பற்றியிருந்தான். காஞ்சி இவனிடமிருந்து சாதவாகனருக்குக் கைமாறிப் பின் பல்லவரிடம் சேர்ந்தது. அதன் பிறகே பல்லவர் களப்பிரர் போர்கள் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தப் புலுமாயியின் பரம்பரை கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அழிவுற்றதென்றும், அதன் பிறகே இரண்டாம் முறையாகப் பல்லவன் இத்தமிழகத்தில் குடியேறி நிலைத்து விட்டனர் என்றும் கூறுவர். இவர்களைத் தவிர, கங்கப் பல்லவர் என்ற சிற்றரசர்களும் அக்காலத்தில் ஆண்ட ஒரு சிறு பரம்பயினர் போலும்!

இவர்களன்றிக் கடம்பர் குல அரசர், மேலைக் கங்கர் போன்றவர் மைசூர் நாட்டிலும் அதன் அருகிலும் அக்காலத்தில் இருந்து அரசாண்டார்கள் என அறிகின்றோம். வேங்கடத்தின் எல்லையில் புல்லி என்ற ஒரு மன்னன் ஆண்டதாக அகநானூறும் புறமும் குறிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/178&oldid=1358145" இலிருந்து மீள்விக்கப்பட்டது