பக்கம்:தமிழக வரலாறு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

177


இவன் மாற்றாரை வெற்றி கண்ட வீரனாகக் காண்கின்றான்[1]. இவ்வாறு எத்தனையோ அரசர் பரம்பரைகள். தமிழ் நாட்டில் மூன்று நான்கு நூற்றாண்டுகள்வரை வந்து வந்து சென்று கொண்டே இருந்தன என அறிகின்றோம். அந்தப் புதியவர்கள் வந்து வந்து மறைந்தாலும் அவரவர்கள் விட்டுச் சென்ற கலை பண்பாடு முதலியன தமிழர் தம் இயல்பான கலை பண்பாடு முதலினவற்றோடு ஒன்றி விட்டன எனலாம். இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இந்த இருண்ட காலத்தின் எல்லை கி. பி. 600 வரையில் நீடித்தது. முதலில் பல்லவர், பின்னர் களப்பிரர், மறுபடியும் பல்லவர், இவர்களுக்கிடையில் வேறு பல சிற்றரசர்கள் வந்து வந்து செல்ல கி. பி.600இல் பாண்டிய நாட்டில் கடுங்கோன் பாண்டியன் சிறந்த விறனாய் அரியணை ஏறினான். அவன் தென்னாட்டில் இருந்த மாற்றாரை எல்லாம் அடக்கி ஒடுக்கி மீண்டும் தமிழ் நெறி தழைக்க வழி வகுத்தான் தமிழ் நாட்டு வட எல்லையில். காஞ்சியைத் தலைவராகக் கொண்ட பல்லவர் பரம்பரையில், அதே காலத்தில், மகேந்திரன் பட்டமெய்தினான். அவனும் நாட்டு மக்கள் மணமறிந்து தன்னைத் தமிழ் வேந்தனாகவே மாற்றிக்கொண்டமையின் வட எல்லையிலிருந்து, வேற்று வேந்தரைக் தோற்கடித்துத் தமிழ் நெறியை மீண்டும் ஒளிபெறச் செய்தான். இப்படி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தன்னிலைகெட்டுத் தாழ்ச்சியுற்ற தமிழகம் மீண்டும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிமிர்ந்து ஒங்கலாயிற்று.


  1. 1.‘மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
    விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ -அகம் 61

    ‘புல்லிய, வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உரையினும் பலவே’
    -புறம் 385

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/179&oldid=1358150" இலிருந்து மீள்விக்கப்பட்டது