பக்கம்:தமிழக வரலாறு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

183


ஆழ்வார்களும் பாடிய பாடல்களே தேவாரம், நலாயிரப் பிரபந்தம் என்ற இலக்கியங்களாகி இன்றளவும். வாழ்கின்றன.

செங்கணான்:

கோச்செங்கணான் சமயத்தொண்டு செய்து சைவம் வைணவம் என்ற இரண்டு சமயங்களையும் வளர்த்தவன். அத்துடன் ‘களவழி நாற்பது’ என்ற ஒரு நூலையும் பொய்கையாரைக் கொண்டு பாடச் செய்தவன். இந்தப் பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கையர் என்று கிருஷ்ணசாமி ஐங்காரைக் - காட்டிக் கூறுவர் டாக்டர். இராசமாணிக்கம் அவர்கள்.[1] திரு. P T. சீனிவாச ஐயங்கார் அவர்கள் முதல் மூன்று ஆழ்வாரையும் மகேந்திரன் காலத்துக்கு (கி. பி. ஏழாம் நூற்றாண்டு) உரியவராக்குவர்.[2] ஆழ்ந்து நோக்கினால் பின்னதுதான் சரியென்பது தோன்றும். எனவே, களவழிப் பொய்கையாரும் பிரபந்தப் பொய்கையாரும் வேறு வேறு காலத்து வாழ்ந்த இருவராவர். ஆழ்வார் பாசுரங்களும் நாயன்மார் பதிகங்களும் ஏறக்குறைய ஒரே காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் தோன்றியனவாகக் கொள்ளுதலே பொருத்தமானதாகும். இது நிற்க.

இக்கோச்செங்கணான் காலம் கி. பி. 200 முதல் 225 வரை என்பர். இவன் சிறந்த சிவ பக்தன்; தில்லையைச் செப்பனிட்டுப் பெருங்கோயிலாக்கினவன். சிதம்பரம் என்னும் தில்லையே இவனால்தான் தோற்ற முற்று ஏற்றமடைந்தது எனலாம். சங்கஇலக்கியங்களிலோ அன்றிக்


  1. 1. பல்லவர் வரலாறு, பக். 10
  2. 2. பல்லவர் வரலாறு, P.T.S. பக் 9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/185&oldid=1358161" இலிருந்து மீள்விக்கப்பட்டது