பக்கம்:தமிழக வரலாறு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தமிழக வரலாறு


காப்பியங்களிலோ தில்லையைப் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லை. ஆனால், இருண்ட காலத்தை அடுத்த ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தில்லையே ‘கோயில்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்று, சைவத் திருத்தலங்களுள்ளே முதன்மை பெற்றதாகிவிட்டது. இது போன்று பல கோயில்களைக் கட்டியவன் இவன். எனவே, பின்னர் வந்த பல்லாயிரம் பத்திப் பாடல்களுக்கு வித்திட்டவன் இக்கோச்செங்கணானே எனலாம். தமிழ் நாட்டில் சங்க காலத்தில் இல்லாத ஒரு புது நெறியை-பத்தி மார்க்கத்தை-இருண்ட கால எல்லையில் தோற்றி வளர்த்து, ஏழாம் நூற்றாண்டில் தேவார பிரபந்த வாயிலாகத் தமிழ் நாட்டுக்கு அளித்தவன் செங்கணானே. அந்நெறி இன்றளவும் அதே நிலையில் போற்றப் பெறுகின்றது.

இவன் கோயில்கள் அமைத்ததோடு, ஒவ்வொரு கோயிலுக்கும் இயற்கையொடு கலந்த ஒவ்வொரு மரத்தையும் உரிமையாக்கிவிட்டான். தில்லைக்குத் தில்லை மரம், மதுரைக்குக் கடம்ப மரம், காஞ்சிக்கு மாமரம், குற்றாலத்துக்குக் குறும்பலா, இப்படி ஒவ்வொரு திருக் கோயிலுக்கும் ஒவ்வொரு தல லிருட்சத்தை அமைத்து அதை ஒட்டிச் சிறு சிறு கோயில்கள் அமைத்தான் இவன். அக்கோயில்களை எழில் மாடங்கள் என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.[1] இவன் கட்டிய அச்சிறு கோயில்களே பின் பதிகங்களால் சிறப்பிக்கப் பெற்றுப் பிற்காலச் சோழர்களால் பெருங் கோயில்களாகப் பெற்றன. புகழ்ச்சோழ நாயனார் என்று சேக்கிழாரால் பாராட்டப்பெற்ற சோழ மன்னரும்[2] இந்த இருண்ட காலத்தவ


  1. எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது
    செய்தோன் (திருமங்கை ஆழ்வார்)

  2. பெரிய புராணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/186&oldid=1358166" இலிருந்து மீள்விக்கப்பட்டது