பக்கம்:தமிழக வரலாறு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

187


பல்லவர் காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு சிறந்த காலமெனக் கொள்ளல் வேண்டும்.

மூன்று மரபுகள்:

பல்லவர் யாவர் என்றும் அவர்கள் எவ்வாறு தமிழகத்தில் வந்தார்களென்றும் மேலே கண்டோம். அவருள் மரபு முறையாக இங்கு வந்தவர்களைக் காணல் ஏற்புடையதாகும் பல்லவர்களைப் பற்றியும் அவர் காலத் தமிழ்நாட்டைப் பற்றியும் பல வரலாற்று நூல்கள் இன்று நாட்டில் உள்ளன. அவற்றின் வழி கால எல்லையில் நின்று தொடர்ந்து ஆண்ட பல்லவ மரபினை அறிய இயலும். பல்லவரை மூன்று வகையாகப் பிரிப்பர்; பிராகிருத மொழிப் பல்லவரை முற்காலப் பல்லவர் என்றும் (கி.பி. 250—340) வடமொழிப் பட்டயப் பல்லவரை இடைக்காலப் பல்லவர் என்றும் (கி.பி. 340—575) கிரந்த—தமிழ் மொழிப் பட்டயப் பல்லவரை மூன்றாம் காலப் பல்லவர் என்றும் (கி.பி.575—900) மூவகையாகப் பிரிப்பர். பல்லவர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள், வட நாட்டிலே சமுத்திரகுப்தர் ஆணை செலுத்தியபோது, அவர் ஆணை கிருஷ்ணை ஆற்றங்கரை வரையில் பரவி இருந்ததென்றும் அக்காலத்தில் காஞ்சியில் விஷ்ணுகோபன் என்ற பல்லவன் ஆண்டான் என்றும் அலகாபாத்துத் தூண் கல்வெட்டுக் குறிக்கின்றது.[1] அக்கல்வெட்டின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். எனவே, விஷ்ணு கோபன் கி.பி. 340—350இல் ஆண்டவன் ஆதல் வேண்டும். எனவே, அதற்கு முன்பே பல்லவர் ஆட்சி காஞ்சியில் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது உறுதி. அப்பல்லவரை வரையறுத்துக் கண்டதில் முதன்முதல் தமிழகத்தை


  1. History of the Pallavas of Kanchi By Gopalan, p. 32.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/189&oldid=1358552" இலிருந்து மீள்விக்கப்பட்டது