பக்கம்:தமிழக வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தமிழக வரலாறு


யாய் இருந்து கல்வித் தொண்டு செய்தான் என்றாலும், அவன், செய்த தொண்டுகள் எத்தகையன என்று திட்டமாகக் கூற இயலாது. அச் சிம்மவிஷ்ணுவின் உருவமும் அவன் மகன் மகேந்திரன் உருவமும் மாமல்லபுரம் ஆதிவராக சுவாமி கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் ‘சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்றும் ‘மகேந்திர போதாதிராஜன்’ என்றும் அவர் தம் பெயர்கள் காணப்படுகின்றன. அவன் கலைவல்லவனாய் இருந்தான். அவன் தொடங்கிய குகைக் கோயில்களே அவன் மகன் மகேந்திரன் காலத்தில் உருப்பெற்று உயர்ந்தன எனலாம்.

மாற்றங்கள்

சங்ககாலத்தில் இல்லாத கோயில்கள் இருண்ட காலத்தில் கோச்செங்கணான் போன்ற அரசர்களால் பத்தியை வளர்ப்பதற்காகத் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டன என மேலே கண்டோம். அக்கோயில்களெல்லாம் ‘சுடுமண்’ என்னும் செங்கற் கோயில்களேயாகும். மகேந்திரன் காலத்திலேதான் கருங்கற் கோயில்கள் தொடங்கப்பெற்றன. அவையும் மலையையே குடையப் பெற்ற குகைக் கோயில்களாய் அமைந்தன. பின் நரசிம்மன் முதலியோர் முயற்சியால் வளர்ந்து, அப்பல்லவர் ஆட்சிக்காலத்துக்குள்ளேயே கருங்கற்களை அடுக்கிக் சட்டிய கோயில்கள் உருவாக்கப் பெற்றன எனலாம். இந்தக் கோயில்களே பிற்காலச் சோழர்தம் பெரும் பணிக்கு வழி காட்டிகளாய் அமைந்தன.

மகேந்திரன்:

மகேந்திரவர்மன் பதினைந்து ஆண்டுகளே(கி.பி.615-630) அரசாண்டான் எனினும், அதற்குள் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/192&oldid=1358444" இலிருந்து மீள்விக்கப்பட்டது