பக்கம்:தமிழக வரலாறு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழக வரலாறு


வாகடகர் தம் அஜந்தாக் குகைக் கோயில்களையும், விஷ்ணுகுண்டர்தம் ஆந்திரக் குகைக் கோயில்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பெற்றன என்பர் டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள்.[1] அக்கூற்று மெய்யெனத் தோன்றினும், நன்கு ஆராய்தற்குரியது.

மகேந்திரன் கல்வெட்டுக்களையும் வெட்டுவித்தான். அவற்றின் மூலமே அம்மன்னனது பட்டப் பெயர்களும், பிறசிறப்புக்களும் நன்கு தெரிகின்றன. மகேந்திரன் இசை, நடனம், சிற்பம், ஓவியம், நாடகம் ஆகிய கலைகளை வளர்த்தவன் அவை அனைத்தும் பழந்தமிழ் முறைப்படியே வளர்ந்தன எனலாம். எனவே இருண்ட காலத்துக்குப்பின் வீழ்ச்சியுற்ற தமிழகத்தைப் பல வகையில் எழுச்சியுறச் செய்த பெருமை மகேந்திரனையே சாரும்.

நரசிம்மன்:

மகேந்திரன் மைந்தனே நரசிம்மன். அவன் கலை வளர்ப்பதில் தந்தையையும விஞ்சியவனாகிவிட்டான். அவனும் கோயில்களைக் குகைகளில் செதுக்கினான். என்றாலும், அக்கோயில்களில் பல சித்திர வேலைப்பாடுகளையும் அமைத்தான் தூண்களில் பல சிங்கங்களின் சிற்பங்கள் இடம் பெற்றன.

அவன் காலத்தில் சாளுக்கிய வேந்தனாகிய புலிகேசி மீண்டும் காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். வட நாட்டுப் பெருவேந்தனாகிய ஹர்ஷனை வென்ற புலிகேசி, அவவெற்றியைப் பெரிதாக எண்ணித் தென்னாட்டின் மேலும் பலமுறை படையெடுத்தான் போலும் எனினும், இறுதியாக அந்த நரசிங்கப் போத்தரையனிடம் தோல்வி-


  1. பல்லவர் வரலாறு, பக். 105
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/194&oldid=1358450" இலிருந்து மீள்விக்கப்பட்டது