பக்கம்:தமிழக வரலாறு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழக வரலாறு


எனக் காட்டுகின்றார். இப்போர் பற்றிப் பல்வேறு வகையில் ஆராய்ச்சியாளர் ஆய்கின்றனர். எவ்வாறாயினும், இது பரமேச்சுரன் ஆட்சித் தொடக்கத்தில் நடந்த போர் என்று கொண்டு மேலே சேல்வோம்.

பல்லவர் செய்த குகைக் கோயில்கள் சிறந்தவை எனக்கண்டோம். இப்பரமேச்சுரன் அம்முறையை மாற்றிக் கருங்கற்களை அடுக்கி முதல் முதல் கோயில் கட்டுவித்தவனாவன். இது காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம் என்னும் கிராமத்தில் எழுப்பப்பெற்றது. இக்கோயிலாலும் இதில் எழுந்த பட்டயச் சாசனத்தாலும் தமிழ் நாட்டுக் கோயில் வழிபாட்டு முறைகளை நன்கு அறியலாம். இவன் மாமல்லபுரத்திலும் கணேசர் கோயில், இராமானுசர் மண்டபம் ஆசியவற்றை அமைத்தான்.

இராசசிம்மன்:

இவனுக்குப்பின் வந்த இராச சிம்மன் காலத்திலும் (666-705) போர்கள் ஒழிந்தபாடில்லை. சளுக்கிய விசயாதித்தனும், கங்கரும், பிறரும் பல்லவருக்குத் தொல்லை தந்தனர். இவ்வாறு பல்லவர், தம் ஆட்சித் தொடக்கம் முதல் வடக்கிலிருந்து வந்த தாக்குதல்களை ஏற்று, முழுதும் வெற்றி கண்டே வந்தனர். ஆனால் இவன் காலத்தில் போருடன் கொடிய பஞ்சம் ஒன்றும் தலை காட்டிற்று. மக்கள் மிக வருந்தினர். எனினும், இவன் சிறந்த வகையில் மக்களை நடத்திச் சென்றான். இவன் சிவனே மனிதனாகப் பிறந்தவன் என்னுமாறு போற்றப்பட்டான். இவன் சிறந்த சிவபக்தன்; பல கல்லூரிகளைக் கட்டினான்; கலை வளர்த்தான். இவற்றுடன் இவன் பல கோயில்களைக் கட்டினான். இவன் கட்டிய முக்கியமான கோயில்கள் காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலும் மாமல்லபுரத் தலசயனப் பெருமாள் கோயிலும் ஆகும். காஞ்சிக் கயிலாசநாதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/200&oldid=1358520" இலிருந்து மீள்விக்கப்பட்டது