பக்கம்:தமிழக வரலாறு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தமிழக வரலாறு


ரும் வடக்கே பல்லவரும் தலை தூக்கித் தமிழ் நாட்டை ஆண்ட காலத்தே, சோழர் வலிகுன்றிச் சிற்றரசராய் இருந்தனர். எனினும், நந்திவர்மனுக்குப் பின் சிறந்த பல்லவ வேந்தர் இல்லை என்பது கண்டோம். தெற்கே பாண்டிய நாட்டிலும் சீமாறன் சீவல்லபன் இறக்க, இரண்டாம் வரகுணன் பட்டத்துக்கு வந்தான். அக் காலத்திலேதான் சோழன் விசயாலயன் தஞ்சையைத் தலைநகர் ஆக்கிக்கொண்டு தலைநிமிர ஆரம்பித்தான். புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்ட பின் சோழர் திருச்சியை அடுத்து உரையூர், பழை யாறை, திருவாரூர் முதலிய இடங்களை அரசிருக்கை யாக்கிக்கொண்டு வாழ்ந்த்னர் என்றும், ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலேதான் விசயாலயன் தஞ்சையைத் தலைநகராக்கிக்கொண்டு தலைநிமிர்ந்தான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கண்டுள்ளனர். விசயாலயனால் புதுப்பிக்கப்பட்ட இப்பரம்பரை, தமிழ் நாட்டுக்கு நிலைத்த புகழைத் தேடித்தந்த பெரும் பரம்பரையாய்த் திகழ்கின்றது.

விசயாலயன் :

விசயாலயன் கி பி.846ல் பட்டத்துக்கு வந்தான். அவன் பல்லவருக்கு உற்ற நண்பனாயிருந்தான். அப்போது காஞ்சியில் நிருபதுங்கப் பல்லவன் அரசாண்டிருந்தான் என்பர். இருவரும் தத்தம் வலி குன்றியிருந்த காரணத்தால் ஒருவரை ஒருவர் நண்பராகக் கொண்டு உதவி பெற்றிருக்கலாம். அதுகாலை பாண்டிய நாட்டில் மாறவர்மன் அரசனாயிருந்தான் அவன் சோழர்மேற்படை எடுத்தான் போலும் விசயாலயனும் நிருபதுங்கனும் சேர்ந்து கி.பி. 1854இல் பாண்டியன் மேல் போர் தொடுத்து வெற்றியும் பெற்றனர். இவ்வெற்றி சோழர் எழுச்சிக்கு வித்தாய் அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/218&oldid=1358615" இலிருந்து மீள்விக்கப்பட்டது