பக்கம்:தமிழக வரலாறு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

229


நாட்டை அமரபுயங்கப் பாண்டியன் ஆண்டு வந்தான். எனவே, அப்பாண்டியனுடன் போர்செய்து வெற்றி கண்ட பிறகே இராசராசன் காந்தளூர் சென்றான் எனக் கொள்ளல் வேண்டும். எனவே, தன் ஆட்சி ஆண்டு மூன்றில் பாண்டியரையும் சேரரையும் வென்று மும்முடிச் சோழன் ஆனான். அங்கிருந்து திரும்பியபின் அவன் தன் பிறந்த நாளாகிய ஐப்பசிச் சதய நாளில் சோழ நாட்டில் பெருவிழாச் செய்தான்.

இராசராசன் போர்களைப்பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் ஒரு வகையில் விளக்கிக் காட்டுகின்றன. முதலில் அமரபுயங்கப் பாண்டியனை வெற்றி கொண்ட இராசராசன் பின்பு சேரனைக் கொல்லம் கொடுங்கோளூர் முதலிய இடங்களில் தோற்றோடச் செய்தான். பின்பு குடமலை நாட்டில் பனசோகை என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் உதவிய ‘பனிஜா’ மன்னனுக்கே தான்வென்ற நாட்டை அளித்துத் திரும்பினான். பின்பு மைசூர் சேலம் பகுதிகளிலுள்ள குடநாட்டுக் கங்கபாடி, நுளம்பபாடி நாடுகளையும் வெற்றி கொண்டான் இராசராசன். பின்பு மைசூர்ப் பகுதியிலுள்ள தடிகைப்பாடியை வென்றான். 991இல் அங்கு இராசராசனது சிறப்புப் பெயராகிய சோழ நாராயணன் என்னும் பெயரால் ஒரு கல்வெட்டு உண்டு. இப்போர்களிலெல்லாம் படைத் தலைமை பூண்டு, படையைச் செலுத்தினவன் இவன் மகன் இராசேந்திரனேயாவன். எனவே, இப்போர்களை எல்லாம் இராசேந்திரன் மேல் ஏற்றிக் கூறுவதும் உண்டு.

ஈழப்படை எடுப்பு:

இராசராசன் காலத்தில் ஈழநாட்டில் ஐந்தாம் மகிந்தன் ஆட்சி செய்துவந்தான். அவன் இராசராச-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/231&oldid=1358791" இலிருந்து மீள்விக்கப்பட்டது