பக்கம்:தமிழக வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தமிழக வரலாறு


ஸ்ரீவிஜய நாட்டையும் கொண்டான். இவையன்றிப் பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இளங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், நக்கவாரம் முதலிய நாடுகளையும் கடற்படையின் உதவியால் கொண்டான் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இவையெல்லாம் இக்காலப் பர்மாத் தொடங்கி ஜாவா வரையிலுள்ள தேசங்களின் அக்காலப் பெயர்கள் என ஆய்ந்து எழுதியுள்ளனர் ஆய்வாளர். அந்தமான், நிக்கோபார்த் தீவுகளும் அவற்றுள் அடங்கியுள்ளன. நக்கவாரமே ‘நிக்கோபார்’ ஆயிற்றென்பர். இவ்வாறு பிற நாடுகளிலெல்லாம் வெற்றிகண்ட பெருவேந்தனாய் விளங்கினான் இராசேந்திரன். தமிழ் நாட்டு வரலாற்றிலேயே இவனுக்கு முன்னும் பின்னும் இவனைப் போன்று சிறந்து வெற்றி கண்ட வீரவேந்தர் யாரும் இல்லை என்பது துணிவு. இவன் இவ்வாறு வெளியில் கருத்திருத்திய காலத்தில் முன் வென்ற ஈழம், சேரநாடு, மேலைச்சாளுக்கிய நாடு முதலியவற்றால் சிறுசிறு குழப்பங்கள் தோன்றின. எனினும், எல்லாவற்றையும் அடக்கி, பரந்த நிலப்பரப்பையும் விரிந்த கடல் எல்லையையும் தன் ஆணையுள் கொண்டு வந்து சிறக்க வாழ்ந்தான் இராசேந்திரன். இவனது பிற்காலப் போர்களுள் சிலவற்றிற்கு இவன் மகன் இராசாதிராசன் உதவி புரிந்தான்.

அமைதி:

போர் நடைபெற்றாலும் நாட்டில் அமைதி குலையா வகையில் தன்னாட்டைக் காத்த நற்பெருவேந்தன் இம் மன்னனாவன். இவன் சிவநெறி போற்றி வளர்த்தவன். இவன் குடும்பப் பெண்களும் பலவகையில் கோயில் பணி புரிந்தனர். இவனுக்கும் இராசராசனுக்கும் இருந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/244&oldid=1358852" இலிருந்து மீள்விக்கப்பட்டது