பக்கம்:தமிழக வரலாறு.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தமிழக வரலாறு


எனவே, 1046இல் விக்கிரம பாண்டியன் என்ற இலங்கை அரசனை வென்றான். இவன் பாண்டியனுக்கு இலங்கையரசன் மகள் வயிற்றுப் பேரன் போலும். இந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் (10, 11-ம் நூற்றாண்டுகள்) ஈழ மன்னரும், பாண்டியரும், சேரரும் தம்முள் மணவினை கொண்டு சோழருக்கு எதிராகவே இருந்தனர் போலும்!

சாளுக்கியப் போர்:

வடக்கே மேலைச்சாளுக்கியருடனும் இராசாதிராசன் போரிட்டான். சாளுக்கியர் அதுகாலைப் பல வகையினராகப் பிரிந்து நின்றனர். ஹோஸ்பெட்டுத் தாலுக்காவிலிருந்த சாளுக்கியர்தம் ‘கம்பளி’ மாளிகை தகர்த்தெறியப்பட்டது. இவன் தனது ஆட்சியில் மேலைச் சாளுக்கியருடன் மும்முறை போர் செய்தான்; பல சாளுக்கியரை வென்று தன் யானைகளைத் துங்கபத்திரைப் பேராற்றில் நீராட்டினான். 1054இல் இவன் ஆட்சி ஆண்டின் இறுதியில் மீண்டும் சாளுக்கியருடன் கொப்பத்தில் போர் நடைபெற்றது. சாளுக்கிய ஆகவமல்லன் இராசாதிராசனை அதில் கொன்றான். உடனே தம்பி இராசேந்திரன் படைத்தலைமை ஏற்றுப் பகைவரைக் கொப்பத்தில் முறியடித்தான். 1070க்குப் பின் வந்த சாளுக்கியர் கல்வெட்டுக்களிலும் இக்குறிப்புக்கள் இடம் பெற்று உள்ளன.

இரண்டாம் இராசேந்திரன் (1051-1063)

கொப்பத்துப் போரினால் அரச பதவி ஏற்ற இரண்டாம் இராசேந்திரன் 1051 முதல் 1054வரை இளவரசனாயிருந்தான்; தமையன் இறக்கத் தான் அரசனானான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் மூவகைப்பட்டன. அனைத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/246&oldid=1358886" இலிருந்து மீள்விக்கப்பட்டது