பக்கம்:தமிழக வரலாறு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

245


தும் இவன் திறமையையும் இவன் பகைவர் இவனிடம் பட்டு ஓடிய சிறுமையையும் நன்கு பாராட்டிக் கூறுகின்றன. இவன் காலத்தில் ஈழப்போர் முக்கியமானது. ஈழநாட்டுப் பெரும் பகுதி சோழர் வசமே இருந்தது, கொப்பத்தில் தோற்றோடிய ஆகவமல்லன் மீண்டும் படையெடுத்து வந்து கிருஷ்ணைக் கரையில் (முடக்காற்றில்) இவனுடன் போரிட்டு அனைவரையம் இழந்து தோற்றோடினான். இவனும், இவன் அண்ணனும் தந்தை நிறுவிய கங்கை கொண்ட சோழபுரத்தையே தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.

வீர இராசேந்திரன்:

இரண்டாம் இராசேந்திரனுக்குப் பின் அவன் தம்பி வீர இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவன் ஏழு ஆண்டுகளே (கி.பி. 1063-70) ஆண்டுள்ளான். இவன் ஆவணி ஆயிலியத்தில் பிறந்தவன். தமையன் இறக்கு முன்பே இளவரசனாய் இருந்தவன். இராசகேசரி பட்டம் தரித்தவன். இவன் மெய்க்கீர்த்திகள் இரண்டு வகையாக அமைந்தன. அவற்றுள் ‘திருவளர் திருப்புயத்து’ என்பது மிக நீண்டதாகும். இது ஏழாம் ஆட்சியாண்டுடன் முடிகின்றது. இவன் ஆட்சி முழுவதும் பெரும்பாலும் போரிலேயே கழிந்தது. இவன் மேலைச் சாளுக்கிய மன்னனை ஐந்துமுறை தோற்கடித்தான்; பொத்தப்பி வேந்தனையும் சேர பாண்டியரையும் போர்களில் வெற்றி கொண்டான். தன் மகனைப் பாண்டிநாட்டரசனாக்கி, ‘சோழ பாண்டியன்’ எனச் சிறப்பித்தான். 1066இல் நடந்த கேரள நாட்டு உதகைப் போரில் பகைவர் தோற்றோடினர். சாளுக்கியப் போரில் முக்கியமானது இவன் ஆகவமல்லனோடு கூடல் சங்கமத்தில் செய்த போரேயாகும். ஒரு போரில் (நான்காம் போர்) ஆகவமல்லன் வருவதாகக் காட்டி, பின் வாராது நின்றுவிட்டான். அதை அறிந்து சீற்றங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/247&oldid=1358905" இலிருந்து மீள்விக்கப்பட்டது