பக்கம்:தமிழக வரலாறு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

247


சேந்திரனுக்கும் மகனாகிய குலோத்துங்கன் தாய்வழி உரிமை கொண்டாடிச் சோழ நாட்டுக்கு வந்து அரசனானான். தன் பாட்டன், மாமன் முதலியோரால் சிறந்த முறையில் ஆளப்பெற்ற சோழ நாட்டுக்கு உண்டான குறையை நீக்கும் வகையில் குலோத்துங்கன் சிறக்க அரசாண்டான் எனல் பொருந்தும்.

குலோத்துங்கன் :

புதிய பரம்பரையிலிருந்து வந்தவனேயானாலும் குலோத்துங்கன் சிறந்த சோழ வேந்தனாகவே விளங்கினான். இவன் கி.பி. 1070முதல் 1120வரை ஐம்பது ஆண்டுகள் அரசாண்டான். இவன் இளமையில் சாளுக்கிய நாட்டில் இல்லாது சோழ நாட்டில் தாய் வழிப் பாட்டன் வீட்டிலேயே வளர்ந்தவன். பூச நாளில் பிறந்தவன், இவன் இளமையில் ‘இராசேந்திரன்’ என்று பாட்டன் பெயரையே சூடிக் கொண்டிருந்தான். தந்தைக்குப்பின் வேங்கி நாட்டு அரசினைச் சிறிய விசயாதித்தன் ஏற்றான். இவன் இளமையில் விஷ்ணு வர்த்தனன் என்ற சிறப்புப் பெயரோடு இளவரசனாய் இருந்த போதிலும் வேங்கி நாட்டு அரசு சிறிய தந்தை கைப்பட்டது. இவன் முதலில் வேறுபட்டு நின்றானேனும், இறுதியில் சிறிய தந்தையோடு கலந்தே இருந்தான்.

தன் மைத்துனன் அதிராசேந்திரன் மகப்பேறற்று 1070ல் இறக்க, நாட்டில் குழப்பம் உண்டாகவே, இவன் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு விரைந்து, அனைவரும் வரவேற்க, 9-6-1070ல் சோழர்தம் அரியணை ஏறினான் அன்று முதல் இராசகேசரி குலோத்துங்கன் ஆனான். இவன் அரசு ஏற்றதும் நாட்டில் அமைதி உண்டாயிற்று. இவன் வழி வேங்கி நாடும் சோழப் பேரரசில் இணையவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/249&oldid=1358921" இலிருந்து மீள்விக்கப்பட்டது