பக்கம்:தமிழக வரலாறு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

தமிழக வரலாறு


நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். குலோத்துங்கன் பரம்பரை தொடர்ந்து சோழநாட்டை அமைதியோடு ஆண்டு அதை வளப்படுத்திற்று. நடைபெற்ற போர்களெல்லாம் அவரவர் செய்த குழப்பம் காரணமாக அமைந்தனவே ஒழியக் குலோத்துங்கன் பிற நாடுகளின் மேல் தானாகப் படை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

வெளிநாட்டுந் தொடர்புகள்.

குலோத்துங்கன் காலத்தில் தமிழ் நாட்டிற்குச் சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது என அறிகின்றோம். கி.பி.1077ல் குலோத்துங்கன் எழுவர் கொண்ட தூதுக்குழு ஒன்றைச் சீன நாட்டிற்கு அனுப்பினான். 1088ல் நடந்த கடாரப் போரில் அந்த நாட்டு மன்னனுக்குத் தானே சென்று உதவிபுரிந்தான். மேலும் கடாரத்தரசன் வேண்டுகோளின்படி நாகைப்பட்டினத்தில் இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற சமணக் கோயில்களுக்கு இறையிலியாக நிலங்களை வழங்கினான் இந்நிகழ்ச்சி கி.பி. 1087இல் எழுதப்பெற்ற ‘சுமத்திரா’ நாட்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது ‘சயாம்’ என்னும் காம்போஜ நாட்டு மன்னனாகிய ஹர்ஷவர்மன் இவனுக்கு நட்பினனாய் இருந்தான். அவன் அளித்த சிறந்த கல் ஒன்றை இவன் சிதம்பரத்துக்கு அளித்தான். அந்நாடுகளையெல்லாம் நல்ல தூதுவர் மூலமும், வாணிப மூலமுமே குலோத்துங்கன் பிணைத்து வைத்திருந்தான்.

இவன் ஆட்சி ஆண்டு 41ல் (கி.பி. 1111) காசிக்கு வடக்கே இருந்தகன்னோசி நாட்டு மன்னனது வடமொழிக் கல்வெட்டு ஒன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது. இது இலட்சுமணபுரிக் காட்சி சாலையில் உள்ள கல்வெட்டை ஒத்திருக்கின்றது. இவன் தன் மக்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/252&oldid=1358954" இலிருந்து மீள்விக்கப்பட்டது