பக்கம்:தமிழக வரலாறு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

251



ஒருவனைப் புத்தனாக்கிப் பர்மாவிற்கு அனுப்ப, அவன் பர்மா மன்னன் மகளையே மணந்து கொண்டான் என்பர். அவன் யார் என்பதும் பிறவும் நன்கு அறிந்து கொள்ள இயலவில்லை.

நல்ல செயல்கள்:

குலோத்துங்கன் இவ்வாறு வலியப் போருக்குச் செல்லாமலும், வந்த பேரை விடாமலும் நாட்டை ஆண்டதோடு, வெளிநாடுகளுடனெல்லாம் தொடர்பு கொண்டு நாட்டில் நல்ல அமைதி கண்டவன். இவனைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் ’சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் புகழ்கின்றன. தவிர்த்த சுங்கம் எத்தகையது என்பது தெரியவில்லை. இவன் காலத்தில் மறுபடியும் சோழநாடு முழுவதும் அளக்கப்பெற்றது. அவ்வளத்தல் செயலை மேற்கொண்ட அதிகாரியின் பெயர் 'உலகளந் தானாகிய திருவரங்கத் தேவன்' என்பதாகும். குலோத் துங்கன் சிறந்த சைவனேயாயினும், பிற சமயங்களையும் போற்றி வளர்த்தவனேயாவன். மன்னார்குடி இராச கோபாலசுவாமி கோயில் கட்டினவன் இவன்; பெளத்த சமணக் கோயில்களுக்கும் நிலங்கள் அளித்துள்ளான்.

இவன் நல்ல கலைஞன், இயல் இசை நாடகம் எனும் முத்தமிழையும் போற்றி வளர்த்தவன். இவன் மனைவியருள் ஏழிசை வல்லபி என்பவள் ஒருத்தி இருந்தாள். பரணி இவன் கலை உள்ளத்தை நன்கு பாராட்டுகிறது. இவன் கவிஞரோடும் கலைஞரோடும் பொழுது போக்கினவன்; சிறப்புப் பெயர்கள் பலவும் சிறந்த பட்டங்கள் பலவும் பெற்றவன். அபயன், செயதரன், சயதுங்கன், விருதராசபயங்கரன். கரிகாலன், இசை நாராயணன். உலகுய்யவந்தான், திருநீற்றுச் சோழன், மனுகுல தீபன், உபய குலோத்தமன் முதலியன இவன் சிறப்புப் பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/253&oldid=1357853" இலிருந்து மீள்விக்கப்பட்டது