பக்கம்:தமிழக வரலாறு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழக வரலாறு



பழமையாகத் திறை செலுத்திவந்த கொங்கு வேந்தரும் இவனை எதிர்த்துத் திறைகட்ட மறுத்திருப் பார்போலும் எனவே, அவர்கள் மேலும் படை எடுத்துச் சென்று வென்று, கருவூரில் ‘சோழ கேரளனாக’ முடிசூட்டிக் கொண்டான். கருவூரும் ‘முடிவழங்கு சோழபுர’ மாயிற்று. வடக்கிலும் சிலர் அடங்கி இருந்தனரேனும், சில ஆந்திரமன்னர், பாண்டி நாட்டில் சோழன் கருத் திருத்திய போது கிளர்ச்சி செய்தனர். கி.பி. 1194-97ல் அவர்களை ஒடுக்க வடக்கிலும் படையெடுத்துச் சென்று வெற்றிகண்டான். எனினும் நெல்லூருக்குக் அப்பால் இவன் கல்வெட்டு இல்லையாதலால், அப்பகுதிகளை இவன் கைவிட்டிருக்க வேண்டும் எனத் தெரிகின்றது.

பாண்டி நாட்டில் 1190ல் வீரபாண்டியனுக்குப் பின் வந்த அவன் மகன் குலசேகரனுடன் இவன் மாறுபட்டான் போலும்! அவனை மட்டியூர், கழிக்கோட்டை ஆகிய ஊர்களில் போரிட்டுத் துரத்திவிட்டான். பின்பு சோழன் மதுரை புகுந்து, 'சோழ பாண்டியன்" என்ற பெயரோடு முடிசூட்டிக் கொண்டான். மூன்று மண்டலம் கொண்டமையால், 'திரிபுவன வீர தேவன்' என இவன் விளங்கினான். மதுரையில் இருந்தகாலை அங்குத் திருக்கோயிலுக்கு விழாச் செய்து, கோபுரங்களுக்கும் பொன் வேய்ந்தான். பின் சிலநாட்கழித்து அடைக்கலம் புகுந்த குலசேகரனுக்குப் பாண்டிநாட்டை வழங்கினான் இவ்வாறு இவனுக்கு முன் நாட்டில் போரின்றி அமைதியாய் இருப்பினும் இவன் காலத்தில் போர்கள் நிகழ்ந்தன. எனினும் இவன் போரோடு பல நல்ல பணிகளும் புரிந்து நாட்டைக் காத்ததோடு பல புலவரையும் ஆதரித்தான்.

இவன் காலத்தில் நாடு குமரி முதல் வேங்கி வரை இருந்தது. இவனும் முன்னோர்போலச் சிறந்த சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/262&oldid=1357919" இலிருந்து மீள்விக்கப்பட்டது