பக்கம்:தமிழக வரலாறு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

263


காணலாம்; அவர்தம் இயற்பெயர்களோடு அவரவர் பெற்ற விருதுப்பெயர்கள் முதலியனவும் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம். இவ்வாறு பல சிற்றரசர்களையும் அரசியல் அதிகாரிகளையும் உடன் வைத்து ஆண்ட இறுதிச் சோழ மன்னன்-ஏன்-தமிழ் மன்னன் இக் குலோத்துங்கனே என்பது பின்வரும் வரலாற்றால் நன்கு விளங்கும்.

இவன் கீழிருந்த அதிகாரிகளும் பிறரும்[1]

1. கிளியூர் மலையமான் இறையூரன் இராசராசச் சேதிராயன் (குறுநில மன்னன்)
2. மலையமான் நரசிம்மவர்மன் ஆகிய கரிகாலச் சோழ ஆடையூர் நாடாள்வான் (குறுநில மன்னன்)
3. அதிகமான் இராசராச தேவன்.
4. விடுகா தழகிய பெருமான் (அதிகமான் மகன்)
5. அமராபரண சீயகங்கன் (சிற்றரசன்; நன்னூல் எழுது வித்தவன்)
6. அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானாகிய கண்டர் சூரியன் சம்புவராயன் (படைத் தலைவன்)
7. ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாணகோ வரையன் (அரசியல் தலைவன்)
8. பொன் பரப்பினான் மகதைப் பெருமாளான இராசராச வாணகோவரையன் (சிற்றரசன்; சில போர்களில் படைத்தலைவன்)
9. கூடலுர் அரச நாராயணன் ஆளப்பிறந்தான் வீர சேகரக் காடவராயன் (பாடி காவல் அதிகாரி)
10. கூடல் ஏழிசை மோகன் மணவாளப் பெருமாள் வானில்லை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவராயன் (பல்லவ மரபினன்)

  1. பிற்காலச் சோழர் சரித்திரம் II பண்டாரத்தார் (பக். 173—180)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/265&oldid=1376197" இலிருந்து மீள்விக்கப்பட்டது