பக்கம்:தமிழக வரலாறு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

269


போசள மன்னன் வல்லாள தேவன் சோழன் ஒருவனின் மகளை மணந்திருந்தான்.

இராசராசனது ஐந்தாம் ஆண்டில் உள்நாட்டுக் குழப்பம் உண்டாயிற்று. மகதநாட்டு வாணகோவரையன் படையெடுப்பே அக்கலகத்துக்குக் காரணம் என வேள்விக்குடிக் கல்வெட்டுக் குறிக்கிறது. சமாதானத்தில் நாட்டைப் பெற்ற இவ்வரசன் வழியறியாது மீண்டும் பாண்டியனைப் போருக்கு இழுத்தான். சுந்தர பாண்டியன் 1231இல் மீண்டும் படையெடுத்தான் சோழன் தோற்கப் பாண்டியன் பழையாறை வந்து முடி சூட்டிக் கொண்டான். தோற்ற இராசராசன் வடக்கே குந்தள அரசர்தம் உதவியைப் பெற வடக்கு நோக்கிச் செல்ல, வழியில் காடவமன்னன் அவனைச் சிறை பிடித்துச் சேந்த மங்கலத்தில் சிறை வைத்தான். அஃது அறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் படை எடுத்து வந்து காடவனை வென்று இராசராசனை மீட்டதோடு, சுந்தர பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ நாட்டையும் மீட்டு இராசராசனிடம் ஒப்படைத்தான். அது முதல் இறுதி வரை இராசராசன் III அமைதியோடு நாட்டை ஆண்டு வந்தான். உள்நாட்டுக் குழப்பமும், சிற்றரசர் உரிமை எழுச்சியும், பாண்டியர் படையெடுப்பும் வளம் பெற்று வாழ்ந்த சோழநாட்டை நிலைகுலையச் செய்தன. எனவே போசள மன்னனது பெரும்படை ஒன்று என்றைக்கும் சோழனுக்கு உதவுமாறு காஞ்சியில் நிலையாக வைக்கப் பெற்றிருந்தது.

இவன் காலத்தில் சைவம் ஓங்கி இருந்தது. சந்தானக் குரவராகிய மெய்கண்டாரர் இவன் காலத்தில் வாழ்ந்தனர் என்பர். இவன் பட்டத்தரசி விளக்கு புவன முழுதுடையாள். போசள மன்னன் வீச நரசிம்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/267&oldid=1357969" இலிருந்து மீள்விக்கப்பட்டது